For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதலீட்டாளர் மாநாடு: குவியுமா முதலீடு.... செழிக்குமா தமிழகம்?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் தமிழகத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் மூலம் சுமார் ஒன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக அரசின் முக்கிய சாதனையாக கருதப்படும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 2500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் பங்கேற்க உல்ளனர்.

Tamil Nadu Targets Rs. 1 Lakh Crore Investment

இந்த மாநாட்டில் வேலுார் சிறை பஜார் உட்பட, 94 சிறுதொழில் முனைவோர் மற்றும், 100 பெரு நிறுவனங்களின் அரங்குகள் அமைத்துள்ளன. இதுதவிர, 25 தேசிய மற்றும் சர்வதேச வங்கிகளின் அரங்குகளும் இடம்பெறுகின்றன. தமிழக அரசின் முக்கிய துறைகளும் அரங்குகள் அமைத்துள்ளன. சர்வதேச பெரு நிறுவனங்களுக்காக, ஆட்டோமொபைல், இன்ஜினியரிங், ரசாயனம், கட்டமைப்பு, உணவு, மின்னணு வன்பொருள் உள்ளிட்ட, 12 துறைகளுக்கு அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், டி.வி.எஸ்., அப்பல்லோ டயர்ஸ், எல் அண்ட் டி, சாம்சங், காமராஜர் துறைமுகம், சி.பி.சி.எல்., சேலம் ஏரோபார்க் டைடல் பார்க், டைடல் பார்க், எச்.சி.எல்., இன்போசிஸ் நிறுவனங்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர உள்கட்டமைப்பு, ஜவுளி, வேளாண், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட, ஒன்பது சிறு, குறு, நிறுவனங்களுக்கான துறைகள் சார்பிலும், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தாலும் ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கொரியா, ரஷ்யா, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இணைந்து இந்த மாநாட்டில் பங்கு கொள்கின்றன.

இந்த மாநாட்டில் தமிழக அரசின் தொழில் வழிகாட்டிக் குழுவும், இந்திய தொழிலகக் கூட்டமைப்பு, இந்திய தொழில் வர்த்தக சம்மேளனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் துறை அமைப்புகளும், கனடா- இந்தியா தொழில் கவுன்சில், இந்தோ- அமெரிக்க வர்த்தக சபை, இத்தாலி வர்த்தக ஏஜென்சி, பிரிட்டன்- இந்தியா வர்த்தக கவுன்சில், அமெரிக்கா- இந்தியா வர்த்தக கவுன்சில் போன்ற பன்னாட்டு தொழில் அமைப்புகளும் இணைந்துள்ளன.

இந்த மாநாட்டில் தமிழக அரசுடன், 90 தொழில் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் விவரமாவது: ( முதலீடு ரூபாய்/ கோடியில் )
டீமா குழுமம் - 12,000
கர்பி குழுமம் - 18,000 (துாத்துக்குடி, எண்ணுாரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை)
மகிந்திரா - 4,000
எம்.ஆர்.எப்., - 4,500
ஸ்பிக் - 6,000
அப்பல்லோ டயர் - 2,000
.டி.வி.எஸ்., மோட்டார் விரிவாக்கம் - 350

English summary
The Tamil Nadu government is holding a two-day Global Investors Meet in Chennai today and tomorrow. The state aims at signing deals that would bring in an investment of at least one lakh crore generating jobs as well.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X