தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது... சு.சுவாமி சொன்னது நிஜமாகிறது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பெரியாரை நாயக்கர் என்று ட்விட்டரில் விமர்சித்துள்ளார் சு.சாமி- வீடியோ

  சென்னை: தமிழகத்துக்கு இனி காவிரி நீர் கிடைக்காது என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. திரும்ப திரும்ப கூறியதுதான் இப்போது நிஜமாகிக் கொண்டிருக்கிறது.

  காவிரியில் தமிழகத்தின் உரிமையை கபளீகரம் செய்து கொண்டே வந்தது கர்நாடகா. இதனைக் கண்டித்து தமிழகத்துக்கு நீதியை பெற்றுத்தர மத்திய அரசுகள் தயாராக இல்லை.

  அன்று காங்கிரஸ்

  அன்று காங்கிரஸ்

  அன்றைய காங்கிரஸ் அரசும் இன்றைய பாஜக அரசும் கர்நாடகா அரசியலுக்காக வஞ்சகத்தை செய்து வந்தன. காவிரி நடுவர் மன்றத்தீர்ப்பை அரசிதழில் கூட அன்றைய காங்கிரஸ் அரசு வெளியிடவில்லை.

  பாஜக அரசு துரோகம்

  பாஜக அரசு துரோகம்

  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கெடு விதித்த போது முடியாது என சொன்னது மத்திய பாஜக அரசு. இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் எங்கே இருக்கிறது காவிரி மேலாண்மை வாரியம்? என கேள்வி கேட்கிறது மத்திய அரசு.

  காவிரி கிடைக்காது என்ற சு.சுவாமி

  காவிரி கிடைக்காது என்ற சு.சுவாமி

  பாஜகவின் ராஜ்யசபா எம்பி. சுப்பிரமணியன் சுவாமி அண்மைக்காலமாக தொடர்ந்து கூறிவருவது, தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைக்காது; வேண்டுமானால் இஸ்ரேலிடம் இருந்து தொழில்நுட்பத்தை வாங்கித் தருகிறேன்.. கடல்நீரை நன்னீராக்கிக் கொள்ளுங்கள் என சாபம் விட்டதைப் போல பேசி வந்தார். இப்போது சுப்பிரமணியன் சுவாமி சொன்னதுதான் நிஜமாகி இருக்கிறது.

  வரலாற்று துரோகம்

  வரலாற்று துரோகம்

  அற்ப அரசியலுக்காக ஒரு இனத்தின் நதிநீர் உரிமையை காவு கொள்வதை யாரும் மன்னிக்க மாட்டார்கள். இதுவரலாற்று துரோகம்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  BJP Rajya Sabha MP Subramanian Swamy said that Tamil Nadu would never be able to get Cauvery water from Karnatak recently.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற