For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நியூஸ்மேக்கர் 2017... வாசகர்கள் மனதில் கமல், அனிதா, ஓபிஎஸ்க்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

2017ம் ஆண்டில் செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்கள் யார் என்று தமிழ் ஒன் இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : 2017ம் ஆண்டில் செய்திகளில் அதிகம் இடம்பெற்ற நபர்கள் யார், அவர்களுக்கு மக்கள் தங்கள் மனதில் எத்தனையாவது இடம் தந்திருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக தமிழ் ஒன் இந்தியா கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. நியூஸ்மேக்கர் 2017 என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் முடிவில் நடிகர் கமல்ஹாசன், மாணவி அனிதா மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வாசகர்கள் அளித்துள்ள வாக்குகள் என்ன என்பதை பார்க்கலாம்.

2017ம் ஆண்டு தமிழக அரசியல் புரட்டிப் போட்ட பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின. 365 நாட்களுமே பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சுற்றி சுழன்று கொண்டிருந்தது. அப்படி 2017ல் செய்திகளில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் யார் என தமிழ் ஒன் இந்தியா சர்வே நடத்தியது.

இந்த சர்வேயில் அரசியல் பிரபலங்கள், சமூக பிரச்னைகளில் பங்கெடுத்தவர்கள், மறக்க முடியாத முகங்கள் உள்ளிட்டோரை வைத்து வோக்குப்பதிவு நடத்தப்பட்டது. இந்த வாக்குப்பதிவின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

டுவிட்டர் அரசியல்வாதி

டுவிட்டர் அரசியல்வாதி

இதில் வாசகர்களின் மனதில் அதிக இடத்தை பிடித்து செய்திகளில் பரபரப்பை ஏற்படுத்தியவராக டிடிவி. தினகரன் முதல் இடத்தில் உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த கமல்ஹாசன் பிக்பாஸ் மேடையிலேயே தனது பொதுப்பணிக்கான அறிவிப்புகளை அடுத்தடுத்து தொடங்க, டுவிட்டர் அரசியல் நாயகன் என்ற பெயரையும் பெற்றார்.

கமல் 2வது இடத்தில்

கமல் 2வது இடத்தில்

அரசுக்கு கோரிக்கை, எச்சரிக்கை என்று கமல்ஹாசனின் அதிர வைத்த டுவிட்டர் பதிவுகள், அரசியலுக்கு எப்போதோ வந்துவிட்டது என்று பரபரப்புக்கு மேல் பரபரப்பை ஏற்படுத்தினார் கமல். இவருக்கு ஒன் இந்தியா வாசகர்கள் 9 ஆயிரத்து 808 பேர் வாக்களித்து 2017வது நியூஸ்மேக்கர் நம்பர் 2 என்ற அந்தஸ்தை தந்துள்ளனர்.

மறக்க முடியாத அனிதா

மறக்க முடியாத அனிதா

நீட் தேர்வினால் மருத்துவ கனவு பறிபோனதால் அரியலூரின் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மாணவி அனிதா தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். நீட் என்ற ஒன்று ஏழை மக்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைக்கும் என்று உலக அளவில் உணரச் செய்தார் அனிதா. 2017ம் ஆண்டின் நியூஸ்மேக்கர் வரிசையில் மாணவி அனிதாவிற்கு நமது வாசகர்கள் 3வது இடத்தை தந்துள்ளனர்.

தர்மயுத்த நாயகன்

தர்மயுத்த நாயகன்

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து பிப்ரவரி மாதத்தில் அதிமுகவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து கழட்டி விட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணி சேர்ந்து அதிமுகவை இணைத்தது வரை தமிழக அரசியலில் 2017ம் ஆண்டு முக்கிய பங்காற்றியவர் ஓ.பன்னீர்செல்வம். நியூஸ்மேக்கர் 2017ல் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஒன் இந்தியா வாசகர்கள் 4வது இடம் தந்துள்ளனர்.

English summary
Tamil One india survey results out on newsmakers 2017 know Kamalhaasan, Anitha and O.Paneerselvam got how much votes and what place they received? from our readers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X