ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் இடம் பிடித்த 'அண்ணா'
அண்ணா என்ற வார்த்தை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் இடம்பெற்றுள்ளது.
சென்னை : அகராதிகளின் இலக்கணமாக இருக்கும் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் தமிழ் வார்த்தையான அண்ணா என்ற வார்த்தையும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்போர்டு அகராதியில் எப்போதும் பல்வேறு மொழிகளில் இருக்கும் பிரபல வார்த்தைகள் அவற்றின் அர்த்தங்கள் சேர்க்கப்படுவது வழக்கம். கடந்த மாதம் ஆக்ஸ்போர்டு அகராதியில் புதிதாக 70 இந்திய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இது வரை ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் அனா(Anna) என்ற வார்த்தை இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் நாணயமான அனாவை குறிக்கும் அர்த்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ், தெலுங்கில் அதிகம் பயன்படுத்தப்படும் அண்ணா(Anna 2) என்ற வார்த்தையும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்ணா என்றால் பெயர்ச்சொல் அதற்கு மூத்த சகோதரர் என்பது அர்த்தம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று உருது வார்த்தையான அப்பா(Abba) அச்சா, பாபு, படா தின், பச்சா, சூர்ய நமஸ்காரம் (யோகாவில் பயன்படுத்துவது) உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுள்ள பெரும்பாலான இந்திய வார்த்தைகள் உறவுமுறைகள், கலாச்சாரம் மற்றும் உணவு முறையை குறிப்பவையாக உள்ளன.

இதுகுறித்து ஆங்கில எடிட்டர் டானிகா சலாசர் கூறுகையில் ''இந்திய ஆங்கிலத்தில் இருந்து சமீபத்தில் ஆக்ஸ்போர்டு அகராதியில் 70 வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த அகராதியில் 900 இந்திய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் புதிய வார்த்தைகள் சேர்க்கப்படுகின்றன. மேலும் 2017 செப்டம்பர் மாதத்தில் ஆயிரம் புதிய வார்த்தைகள் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓஈடி கூறியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications