சென்னை சிறுமி பலாத்காரம்: மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை.. தூக்கிலிடுங்கள்.. தமிழிசை ஆவேசம்
சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அயனாவரத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்த அனைவரையும் தூக்கிலிட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை காவலாளி, பிளம்பர், லிப்ட் ஆப்ரேட்டர் என 15 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமிக்கு மயக்க ஊசி மற்றும் போதை ஊசி போட்டு இந்த கொடூரத்தை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். சிறுமியால் பேச முடியாததை பயன்படுத்தி இந்த கொடூர செயலில் வயது வித்தியாசமின்றி இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது.

31ஆம் தேதி வரை காவல்
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 17 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள போலீசார் அவர்களை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 17 பேருக்கும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழிசை கடும் கண்டனம்
சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறுமி கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்
சிறுமி வன்கொடுமைக்கு காரணமான அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். சிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு அதுதான் சரியான தண்டனை.

மிருகங்களுக்கு தேவையில்லை
மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவையில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைதான் சரியானது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆவேசமாக பேசினார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications