For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடி தூள்! ரேஷன் கடைகளில்.. தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஜெ ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு குறித்து கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரேஷன் அரிசிகளுக்குக் கடத்தப்படுவதாக சில காலமாகவே புகார்கள் உள்ளன.

இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்த வருகிறது. இருப்பினும், இதற்குப் பெரியளவில் பலன் கிடைப்பதில்லை.. ரேஷன் அரிசி கடத்தல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ரேஷன் கார்டுக்கு ரூ.1000 குறித்து ஆலோசனை? முதல்வர் தலைமையில் ஜன.4ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்ரேஷன் கார்டுக்கு ரூ.1000 குறித்து ஆலோசனை? முதல்வர் தலைமையில் ஜன.4ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

 ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகள்

அதேபோல ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களும் சிறப்பாக வழங்கப்படுவதில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து விவசாயிகளுக்கு நெற்களம் அமைத்து விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கும் விழா நடைபெற்றது.

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். விவசாயிகளுக்காக அமைக்கப்பட்ட நெற்களத்தை தொடங்கி வைத்து அவர் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச தார்பாய்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தரமுடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

 தரமான பொருட்கள்

தரமான பொருட்கள்

அதன் படி அனைத்து ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். இதற்காகத் தொடர்ச்சியாக ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள ரேஷன் கடைகளிலும் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறது. இதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்... ஒரு சில கடைகளில் மட்டுமே தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாகப் புகார் உள்ளது.

 புதிய உத்தரவு

புதிய உத்தரவு

அதையும் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குறிப்பாக ரேஷன் கடைகளுக்கு இரவு நேரங்களில் வாகனங்களில் பொருட்களைக் கொண்டு வர தடை விதித்துள்ளோம். பகல் நேரத்தில் மட்டுமே பொருட்களைக் கொண்டு வர உத்தரவிட்டுள்ளோம். அப்போது தான் தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.. தரமற்ற பொருட்கள் இருந்தால் அதை உடனடியாக மாற்றி மாற்று ஏற்பாடு செய்து தரமுடியும்" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Tamilnadu govt order no ration shop should get products on night says j radhakrishnan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X