எடப்பாடி கோஷ்டியிடம் என்னவெல்லாம் கேட்கலாம்? நிர்வாகிகளோடு ஓ.பி.எஸ் தீவிர ஆலோசனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓ.பி.எஸ் தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

வைத்திலிங்கம் தலைமையில் 7 அமைச்சர்கள் அடங்கிய குழுவை எடப்பாடி கோஷ்டி அமைத்துள்ளது. அவர்களுடன் பேபச்சு நடத்த தாங்களும் குழு அமைக்க உள்ளோம் என்று ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி அறிவித்தார்.

Tamilnadu politics: O.Pannerselvam met with senior leaders

இந்த நிலையில் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் இன்று இரவு 7 மணியளவில் ஆலோசனை நடத்தினர். தங்கள் தரப்பு குழுவின் டிமாண்டுகள் என்னென்ன, குழுவில் யார், யார் இருக்க வேண்டும் என்பது போன்றவை இதில் விவாதிக்கப்பட்டுள்ளன.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
O.Pannerselvam met with senior leaders as he has to set up a team to co-ordinate Edappadi team.
Please Wait while comments are loading...