தமிழகத்திலும் புதுவையிலும் நீட்டுக்கு எதிராக பிரமாண்ட ஆர்ப்பாட்டம் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புதுச்சேரியிலும் நீட் தேர்வுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட கூட்டத்தை திமுக நேற்று நடத்தியது. அதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.

கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, நீட் தேர்வால் மருத்துவராக முடியாத காரணத்தால், அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் மரணம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்திய காரணத்தால், மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 In Tamilnadu and Puducherry Opposite parties done Protest against NEET

இந்நிலையில், நீட் தேர்வை ரத்துச் செய்யக் கோரியும் அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் நேற்று திமுக தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், விசிக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் திமுகவினரும் கலந்துகொண்டனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Tamilnadu and in Puducherry Dmk and other opposite parties done protest demanding justice for Anitha's death and ban on neet

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற