தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்யும்.. வானிலை மையம் ஜில் அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பசலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வருகிறது. குறிப்பாக வட தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது.

Tamilnadu and Puduchery will get thunder rain: Chennai meteorological center

இந்நிலையில் மாலத்தீவு மற்றும் லட்சத் தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடி, மேட்டுப்பாளையம், திருச்சி விமான நிலையத்தில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai meteorological center says Tamilnadu and Puduchery will get thunder rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற