தமிழர் போராட்டத்துக்கு பணிந்தது ஐபிஎல் நிர்வாகம்- 6 போட்டியும் வெளி மாநிலத்துக்கு மாற்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அடிபணிந்தது ஐபிஎல் நிர்வாகம்...சென்னை போட்டிகள் இடமாற்றம்- வீடியோ

  சென்னை: தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்ததன் காரணமாக சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை மாற்ற ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் தமிழகத்தில் ஐபிஎல் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு இடமளிக்கக்கூடாது என தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

  ஆனால் திட்டமிட்டப்படி சென்னையில் குறிப்பிட்ட தேதிகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்திருந்தார். போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் சுக்லா.

  முடங்கிய அண்ணாசாலை

  முடங்கிய அண்ணாசாலை

  தமிழ் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி சென்னையில் நேற்று ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதனைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தால் சென்னை அண்ணாசாலை ஸ்தம்பித்தது.

  செருப்பு வீச்சு

  செருப்பு வீச்சு

  வீரர்கள் ஹோட்டலில் இருந்து மைதானத்திற்கு வந்து சேரவே பெரும்பாடுபட்டனர். அதையும் மீறி நடைபெற்ற போட்டியில் ரசிகர்கள் என்ற போர்வையில் புகுந்த நாம் தமிழர் கட்சியினர் செருப்புகளை வீசியும் , சட்டைகளை கழட்டி எறிந்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  ஐபிஎல் நிர்வாகம்

  ஐபிஎல் நிர்வாகம்

  இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தமிழ் அமைப்புகளின் அச்சுறுத்தல் தமிழர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.

  போராட்டத்திற்கு வெற்றி

  போராட்டத்திற்கு வெற்றி

  இதனை தமிழர்களின் எதிர்ப்புக்கு ஐபிஎல் நிர்வாகம் பணிந்ததாகவே கருதப்படுகிறது. ஒரு வழியாக தமிழர்களின் போராட்டத்திற்கும் தமிழ் அமைப்புகளின் விடாமுயற்சிக்கும் கிடைத்த வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  IPL management has decided to change IPL matches to be held in Chennai due to protests in Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற