For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்: தமிழிசை

தேர்ச்சியடையாத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என தமிழிசை கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை

    சென்னை: நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்ச்சியடையாத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 60 பேர் தேர்ச்சி பெற முடியவில்லை. இதில் நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி எலி மருந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

     Tamizhisai Soundararajan congratulate Tamil students who won the neet exam

    அதேபோன்று விழுப்புரம் செஞ்சி அருகே மேல்சேவூரைச் சேர்ந்த கீர்த்திகா என்ற மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் அகில இந்திய அளவில் தமிழக மாணவி 12-வது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

    மேலும் தேர்ச்சியடையாத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம், அவர்களுக்கு இன்னும் 2 வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu BJP State President Tamizhisai Soundararajan has congratulated Tamil students who won the neet exam. She Also said that, the failing students do not worry and they have 2 more opportunities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X