For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.... டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறதாம்!

டாஸ்மாக் மதுபான கடைகள் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசின் மதுபான கடைகளால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள நெடுஞ்சாலைகளால் விபத்துகள் ஏற்படுவதாலும் அதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டருக்கு தொலைவில் உள்ள கடைகளை மூட வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

TASMAC run in loss

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் 3000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் ஊருக்குள் கடைவைக்க ஊழியர்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மீறி வைக்கப்படும் டாஸ்மாக் கடைகளை பொதுமக்களே அடித்து உடைத்து வந்தனர். மேலும் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி அறவழியிலும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக அரசு தெரிவித்துள்ளது. 2015 -16-ம் நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.125.64 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவன பட்டியலில் டாஸ்மாக் 9-வது இடம் பிடித்துள்ளது.

எம்எல்ஏ-க்களின் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தி நிலையில் டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற செய்தி பொதுமக்களுக்கு இனிப்பான செய்தியாகும்.

English summary
TN Tasmac is running in loss says TN Government. It gives Rs. 125 crores.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X