அதிகாரிகளின் மிரட்டலுக்கு பயந்து தப்பி ஓடிய வரி வசூல் அதிகாரி!
நாகர்கோவில்: அதிகாரிகளின் தொடர் மிரட்டலால் பயந்து போன வரி வசூலிப்பு அதிகாரி மாயமானார். இதுகுறித்துப் போலீஸாருக்குப் புகார் செல்ல போலீஸார் அவரைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பேரூராட்சியில் வரி வசூலராக பணியாற்றி வந்தவர் ராஜூ. இவர் நாகர்கோவில் கோட்டார் வடிவீஸ்வரத்தை சேர்ந்தவர். கடந்த 6ம் தேதி அலுவலகத்திற்கு செல்வதாக தாயாரிடம் கூறி விட்டு சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து ராஜூவை தேடி வந்தனர். இதற்கிடையே வரி வசூலிக்க கோரி அதிகராரிகள் தொடர்ந்து மிரட்டியதால்தான் ராஜூ மாயம் ஆனார் என எஸ்பியிடம் அரசு ஊழியர் சங்கம் மனு கொடுத்தது. இதனால் அவரை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதிகாலையில் வடசேரியில் உள்ள சிவன் கோவிலில் ராஜு இருப்பதாக அவரது சகோதரருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்று தனது சகோதரரை அழைத்து கொண்டு கோட்டார் காவல் நிலையம் வந்தார். அங்கு அவரிடம் போலீசார் விசாரணை நுடத்தி வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது ராஜு கூறுகையில், சமீபத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் அதிகாரி ஓருவர் என்னை கடுமையாக திட்டினார். வரி வசூலிக்க முடியவில்லை என்றால் வீட்டுக்கு போ, நீ வேலைக்கு லாயக்கு அற்றவன் என்றெல்லாம் கூறினார். இதனால் மனம் உடைந்தேன். இதன் காரணமாக யாரிடமும் சொல்லாமல் கோயிலுக்கு சென்று தங்கி வந்தேன். கடைசியாக வடசேரி சிவன் கோவிலுககு சென்ற போது எனது சகோதரர் வந்து கூட்டி வந்தார் என்றார்.
உயர் அதிகாரிகள் தொல்லையால் வரி வசூலிப்பு அதிகாரி தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications