For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரண்டு பொறுப்பு கேட்டு ஓபிஎஸ் அணியை தலைதெறிக்க ஓடவிட்ட தீபா!

ஓபிஎஸ் அணியுடன் இணைந்து செயல்படுவதற்கு தீபா விதித்த நிபந்தனைகளைப் பற்றிதான் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியுடன் விவாதித்து வருகின்றனராம்.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: கட்சியா, இயக்கமா எது நடத்துவது, எப்படி நடத்துவது என தெரியாமல் அரசியல் களத்தில் கால்பதித்த தீபா கேட்ட இரண்டு பொறுப்புகள்தான் ஓபிஎஸ் அணியை இன்னமும் அதிர்ச்சியிலேயே உறைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒற்றை காரணத்துக்காக தலைவரை தேடும் அதிமுக தொண்டர்களில் ஒருபகுதியினர் தீபாவை ஆதரிக்கின்றனர். அதேநேரத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அணி விஸ்வரூபமெடுத்ததால் பெரும்பகுதி தொண்டர்கள் 'அங்கிட்டு' சாய்ந்துவிட்டனர்.

இதனிடையே திடீரென ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ்- தீபா சந்திப்பு நடைபெற்றது. தீபாவை வீட்டுக்கு அழைத்து ஆரத்தி எடுத்து வரவேற்றார் ஓபிஎஸ்.

திடீரென இயக்கம்

திடீரென இயக்கம்

அப்போது தாங்கள் இருவரும் இணைந்து செயல்படுவோம் என தீபா கூறியிருந்தார். ஆனால் திடீரென தனி வாத்தியம் வாசிக்கத் தொடங்கிவிட்டார் தீபா.

நம்பிக்கையில் ஓபிஎஸ் டீம்

நம்பிக்கையில் ஓபிஎஸ் டீம்

இருந்தபோதும் ஓபிஎஸ் அணி, தீபா வருவார் என இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறது. இதனிடையே தீபா முன்வைத்த இரண்டு நிபந்தனைகள் குறித்துதான் ஓபிஎஸ் அணி இன்னமும் அதிர்ச்சியுடன் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இரண்டு நிபந்தனைகள்

இரண்டு நிபந்தனைகள்

ஓபிஎஸ் அணியில் தாம் இணைய வேண்டுமானால் தம்மை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும்; அதேபோல் அதிமுக பொதுச்செயலர் பதவியும் தமக்கு தரப்பட வேண்டும் என்று ஒரே போடாக போட்டாராம் தீபா. அரசியலில் 'அ'வை எழுத தொடங்கியிருக்கும் தீபாவுக்கு சசிகலாவைவிட பேராசை அதிகமாக இருக்கிறதே என அதிர்ந்து போனதாம் ஓபிஎஸ் அணி.

நிராகரிப்பு

நிராகரிப்பு

இந்த நிபந்தனைகளை நாசூக்காக நிராகரித்துவிட்டது ஓபிஎஸ் அணி. இதனால்தான் தனியாக பேரவையை தொடங்கி பஞ்சாயத்துகளை எதிர்கொண்டு வருகிறாராம் தீபா.

English summary
ADMK's O Panneerselvam team shocked over Jayalalithaa's niece J Deepa's two demands.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X