எங்களைப் பாத்தாலே பயம்... அதான் சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை- தங்க தமிழ்ச்செல்வன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தினகரன் அணியினரை பார்த்தாலே பயம் அதான் சட்டசபைக்குள்ளே விடலை- வீடியோ

சென்னை: அடையாள அட்டை வைத்திருந்தும் எங்களை அனுமதிக்க மறுத்தது கண்டிக்கக் தக்கது என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபை ஆளுநர் உரையோடு தொடங்கியது. அப்போது கறுப்பு சட்டையோடு வந்த தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தங்க தமிழ்செல்வனை அவைக்குள் விட போலீசார் மறுக்கவே வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன் தங்களைப் பார்த்தாலே ஆளுங்கட்சிக்குப் பயம் என்று கூறி கலாய்த்தார்.

 பார்த்தாலே பயம்

பார்த்தாலே பயம்

இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு எம்எல்ஏ உள்ளே இருப்பதைப் பார்த்தே எல்லோரும் பயந்து கொண்டிருக்கின்றனர். இனி நாங்கள் எல்லோரும் போனால் அவ்வளவுதான்.

 கோர்ட் தீர்ப்பு வரட்டும்

கோர்ட் தீர்ப்பு வரட்டும்

அதான் எங்களை உள்ளே விட மறுக்கின்றனர். வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரட்டும். என்னுடைய முகத்தை இந்த தமிழகத்திற்கே அடையாளம் தெரியுமே?

 ஐடி காட்டியும் விடலைன்னா எப்படி

ஐடி காட்டியும் விடலைன்னா எப்படி

நான் அடையாள அட்டையை காட்டியும் எங்களை உள்ளே விட மறுக்கலாமா? இது கண்டனத்திற்கு உரியது. வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் கூறியுள்ளார் தங்க தமிழ் செல்வன்.

 தகுதி நீக்கமானவர்கள்

தகுதி நீக்கமானவர்கள்

தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். அதில் ஒருவர் தங்க தமிழ்ச்செல்வன். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் 18 பேரும் சட்டசபைக்குள் போக முடியாத நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 18 பேரும் வந்தால் சிக்கல்

18 பேரும் வந்தால் சிக்கல்

உயர்நீதிமன்றத்தில் இந்த தகுதி நீக்கம் செல்லாது என்று உத்தரவு வந்தால் அது தினகரன் தரப்புக்கு பெரும் சாதகமாக அமையும், ஆளுங்கட்சிக்கு பெரும் சிக்கலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dinakaran supporter and disqualified MLA Thanga Tamilselvan arrived in the Assembly to see of his leader's maiden Assembly meeting.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற