மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் தொடக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது.

நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக வழக்கமாக பெறும் வாக்குகளை கூட பெறாமல் டெபாசிட்டை இழந்து படுதோல்வி அடைந்தது. இது திமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

The DMK High Command Committee Meeting started in Chennai Anna Arivalayam

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஆர்.கே.நகர் தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்படுகிறது.

மேலும் கட்சி அமைப்பு நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

மேலும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., மற்றும் தலைமை நிலைய செயலாளர்கள், குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The DMK High Command Committee Meeting has been started in Chennai Anna Arivalayam. DMK working president Stalin initiats this meeting. RK defeat also discussing in this meet.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற