ஆகே.நகர் தொகுதியில் இன்று முதல் பணம் வெள்ளமாக பாயும்.. ராமதாஸ் கணிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்கே.நகர் தொகுதியில் இன்று முதல் பண வெள்ளம் பாயும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நக்கலடித்துள்ளார். சசிகலா தரப்பு அதிமுக சார்பில் தினகரன் போட்டியிடுவதாக அறிவித்ததையடுத்து ராமதாஸ் இந்த தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படி நக்கலடித்து டிவிட்டியுள்ளார்.

ஆர்கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் வேட்பாளர் தேர்வு, அறிவிப்பு என அரசியல் கட்சிகள் படு பிசியாக வேலை பார்த்து வருகின்றனர். ஆளும் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் ஆட்சி மன்றக் குழு இன்று வேட்பாளரை அறிவித்து விட்டது.

சசிகலாவின் அக்காள் மகனும் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து துரத்தப்பட்டவருமான டிடிவி தினகரன்தான் அவரது தரப்பு வேட்பாளர். ஏற்கனவே கட்சியை கைப்பிடிக்குள் வைத்துள்ள சசிகலா குடும்பம் இதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர காய் நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் மீது பயம்

ஓபிஎஸ் மீது பயம்

என்னதான் முதல்வராக பதவியேற்க மாட்டேன் என தினகரன் சத்தியம் செய்தாலும் அதனை நம்பபோவதில்லை என மக்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகதான் எங்களின் எதிரி என்று தினகரன் சொன்னாலும் அவர் ஓபிஎஸ் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், ஓபிஎஸ்க்கு மக்களிடம் உள்ள ஆதரவை கண்டு தினகரன் அஞ்சுவதையே காட்டுவதாக உள்ளது.

அதிமுகவுக்கு பின்னடைவு

அதிமுகவுக்கு பின்னடைவு

இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமான ஒன்று என்றாலும், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம், முதல்வராக சசிகலா காட்டிய அவசரம், சசிகலாவின் குடும்பம் அதிமுகவை கைப்பற்றியது, அதிமுகவில் ஏற்பட்ட பிளவு என எல்லாமே அவர்களுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் கருதப்படுகிறது.

சசி குடும்பத்துக்கு கவுரப் பிரச்சனை

சசி குடும்பத்துக்கு கவுரப் பிரச்சனை

இதனால் இந்த இடைத்தேர்தல் டிடிவி.தினகரன் மட்டுமின்றி ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்துக்கே கவுரவப் பிரச்சனை என்பதால் இந்த தேர்தலில் எப்பாடுப்பட்டாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் தினகரன்.

பணமழை அல்ல பண வெள்ளம்

இந்நிலையில் நாட்டு நடப்புகளை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டு கிண்டலும் கேலியுமாக விமர்சித்து வரும் ராமதாஸ், டிடிவி.தினகரனின் போட்டி குறித்து நக்கலடித்துள்ளார். அதாவது, ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி தினகரன் போட்டி என அதிமுக அறிவித்திருப்பதால் அங்கு இன்று முதல் பணமழை அல்ல பண வெள்ளமே பாயும் என தெரிவித்துள்ளார். ராமதாஸின் இந்த டிவிட்டுக்கு இதுவரை சுமார் 300 பேர் லைக் கொடுத்துள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK fouder Ramadoss making fun of TTV.Dinakaran's announcement of RK.Nagar by election. He is telling that the flood of money will be flowing from today in RK.Nagar constituency.
Please Wait while comments are loading...