விபத்து நடந்து ஒரு நாளாகியும் சரியாகவில்லை சென்னை விமான நிலைய முக்கிய ஓடுதளம்.. விமானங்கள் தாமதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  விபத்து நடந்து ஒரு நாளாகியும் சரியாகவில்லை-வீடியோ

  சென்னை: ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்றும் முக்கிய ஓடுபாதை மூடப்பட்டிருந்தது.

  சென்னையில் இருந்து டெல்லி செல்லும் போயிங் ரக விமானம் நேற்று மதியம் இயந்திர கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது திடீரென டயர் வெடித்தது. இதனால் ஓடுதளம் சேதமடைந்துள்ளது.

  The main runway at Chennai airport is unavailable

  டயர் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற முதலாவது ஓடுதளம் நேற்று மதியம் முதல் மூடப்பட்டு, 2வது ஓடுதளம் மூலமாக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

  ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட டிவிட்டில், மற்றொரு விமான சேவை நிறுவனம் தொடர்புள்ள ஒரு நிகழ்வால், சென்னை விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதை இன்னும் செயல்படவில்லை. எனவே, விமான போக்குவரத்தில் தாமதம் ஏற்படுகிறது. பயணிகள் இதை தெரிந்துகொண்டு விமான நிலையம் வரவும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The main runway at Chennai airport is unavailable due to an incident involving an incident of SpiceJet airline.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற