For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமணமான பெண் இறந்தால்.. பெண்ணின் தாய் வாரிசாக முடியுமா?.. சென்னை ஹைகோர்ட் பரபர உத்தரவு!

திருமணமான பெண் இறந்தால், சட்டப்பூர்வ வாரிசாக அவரது தாய் ஆக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By Sivam
Google Oneindia Tamil News

சென்னை: திருமணமான பெண் இறந்தால், சட்டப்பூர்வ வாரிசாக அவரது தாய் ஆக முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை அமைந்தகரையை சேர்ந்த பி.வி.ஆர்.கிருஷ்ணா என்பவருக்கும் விஜயநாகலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கடந்த 2013ம் ஆண்டு விஜயநாகலட்சுமி இறந்தவிட்டார். அவரது சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில், விஜயநாகலட்சுமியின் தாயார் சேகரியின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

The mother of a dead married woman cannot claim assets right says MHC

மாமியாரின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரின் பெயரை நீக்க கோரியும் சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், கிருஷ்ணா மனு கொடுத்துள்ளார் .ஆனால் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனது மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்து வாரிசுரிமை சட்டப்படி ஒரு ஆண் இறந்துவிட்டால் மனைவி, குழந்தை மட்டுமல்லாமல், அவரது தாயாரும் சட்டப்பூர்வ வாரிசுகளாகத்தான் கருதப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்து வாரிசுரிமை சட்டப்படி மணமான ஒரு ஆண் இறக்கும்போது மட்டுமே இது பொருந்தும் எனவும், ஒரு பெண் இறந்துவிட்டால் அவரது கணவரும், குழந்தையும் மட்டுமே சட்டபூர்வ வாரிசுகள் ஆகமுடியும் எனவும், இறந்த பெண்ணின் தாய் தந்தையை சட்டப்பூர்வ வாரிசாக கருதமுடியாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விஜயநாகலட்சுமியின் வாரிசு சான்றிதழை ரத்து செய்ததுடன், அவரது கணவர் கிருஷ்ணா மற்றும் குழந்தை பெயர்கள் மட்டுமே கொண்ட புதிய வாரிசு சான்றிதழை பிப்ரவரி 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

English summary
The mother of a dead married woman cannot claim assets right says Madras High Court .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X