For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகி.. தினகரன் ஆவேசம்

இரட்டை இலையும் கட்சியும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது என டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகி.. தினகரன் ஆவேசம்- வீடியோ

    சேலம் இரட்டை இலையும் கட்சியும் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிவிட்டது என டிடிவி தினகரன் சாடியுள்ளார்.

    இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் மதுசூதனன் அணிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் கட்சியையும் சின்னத்தையும் இனி ஓபிஎஸ் ஈபிஎஸ தரப்பினர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த தீர்ப்பு சசிகலா மற்றும தினகரன் தரப்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

    இந்நிலையில் டிடிவி தினகரன் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் ஆணையம் நடுநிலையாக செயல்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

    குரங்கு கையில் பூமாலை

    குரங்கு கையில் பூமாலை

    மேலும் இரட்டை இலையும் கட்சியும் ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்புக்கு கிடைத்திருப்பதால் குரங்கு கையில் சிக்கிய பூமாலையாகிகவிட்டது என்றும் அவர் சாடினார். மேலும் ஓபிஎஸின் நிலை தற்போது திரிசங்கு நிலையாகிவிட்டது என்றும் அவர் கூறினார்.

    ஈபிஎஸ்க்கு மோடி ஆதரவு

    ஈபிஎஸ்க்கு மோடி ஆதரவு

    ஓபிஎஸ் நிலை என்னவாகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் டிடிவி தினகரன் கூறினார். ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த பிரதமர் மோடி தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருப்பதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

    மத்திய அரசின் விருப்பப்படியே

    மத்திய அரசின் விருப்பப்படியே

    மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றும் அவர் கூறினார். குஜராத் தலைமை செயலாளராக இருந்தவர் தலைமை தேர்தல் ஆணையர் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார்.

    English summary
    The party and the symbol became garland of mokey's hand said TTV Dinakaran. Double leaf symbol is alloted for Madhusoothanan team.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X