டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா? என்ன சொல்கிறார் ஜெயக்குமார்?
டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாறிமாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருவதால் தமிழக அரசியல் களம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை கலைக்க ஓ.பன்னீர்செல்வம் சதி செய்ததாகவும் இதுதொடர்பாக கடந்த ஆண்டு தன்னை சந்தித்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார் டிடிவி தினகரன்.

தினகரன் மீது குற்றச்சாட்டு
ஆனால் டிடிவி தினகரனை கடந்த ஆண்டு கட்சியில் இணைவதற்கு முன்பு சந்தித்தது உண்மைதான் ஆனால் அதன் நோக்கம் வேறு என ஒப்புக்கொண்ட ஓபிஎஸ், தனது பெயரை கெடுக்கவே டிடிவி தினகரன் இதுபோன்ற சின்னத்தனமான அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.

ஆதாரம் உள்ளது
முன்னதாக அதிமுக- அமமுக ஆகிய இரு கட்சிகளை இணைத்துக்கொள்ளலாம் என தூது விட்டவர் டிடிவி தினகரன் தான் என அமைச்சர் தங்கமணி கூறியிருந்தார். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

சேர்க்கப்படமாட்டார்
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தினகரன் இனி ஒருபோதும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார் என்றார்.

தினகரனுக்கு வேறு வழியில்லை
மேலும் அவர் பேசியதாவது, தினகரன் வேண்டுமானால் அதிமுகவில் மீண்டும் இணையும் நிலைப்பாட்டை எடுக்கலாம். தினகரனுக்கு வேறு வழியில்லை.

நாம் ஒருவர் நமக்கு ஒருவர்
அமமுக நாம் ஒருவர், நமக்கு ஒருவர் என்ற நிலையில் உள்ளது. அதனால் அதிமுகவில் இணைய தினகரன் விரும்பலாம். ஆனால் அவரை கட்சியில் சேர்த்துக்கொள்ளும் எண்ணம் எங்களுக்கு துளியும் இல்லை.

நடக்காத ஒன்று
கட்சியில் தினகரனை சேர்ப்பது என்பது நடக்காத ஒன்று. எழுதி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ள சொல்லுங்கள். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
{document1}
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications