வாய்ஸ் டெஸ்டே தேவையில்லை... இந்த வீடியோவிலேயே பளிச்சினு தெரிதே
Recommended Video

சென்னை: புதுக்கோட்டையில் எச் ராஜா போலீஸ் மற்றும் நீதிமன்றத்துக்கு எதிராக அவதூறாக பேசிய மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வாய்ஸ் டெஸ்ட்டுக்கு அவசியமே இருக்காது போலயே. கனகச்சிதமாக வார்த்தைகளும் உதடு அசைவுகளும் பொருந்தியுள்ளதே.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் மேடை அமைக்காததற்கு எச் ராஜா கொந்தளித்தார். இதற்காக காவல் துறையை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அவ்வளவையும் செய்து விட்டார்.
|
அவதூறு
உயர்நீதிமன்ற உத்தரவின் படி மேடை அமைக்கக் கூடாது என்று கூறிய போலீஸாரை பார்த்து ஹைகோர்ட்டாவது --------------, ஹைகோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்று எச் ராஜா அவதூறாக பேசியுள்ளார்.
|
8 பிரிவுகளின் கீழ் வழக்கு
இந்த நிலையில் நேற்று அந்தர் பல்டியை அவர் அடித்துள்ளார். அது அவர் போலீஸையும் ஹைகோர்ட்டையும் தவறாக பேசவே இல்லையாம். யாரோ எடிட் செய்து வீடியோ எடுத்து விட்டனராம். அண்டன் புழுகன் ஆகாச புழுகனையும் விஞ்சிவிட்டார் எச் ராஜா. எனினும் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
|
வீடியோ
ஏன் வாய்ஸ் டெஸ்ட் எடுத்து பாருங்கள் என்று சவால் விட வேண்டியதுதானே என்று எச் ராஜாவுக்கு நெட்டிசன்கள் ஐடியா கொடுத்தனர். ஆனால் தற்போது வேறு கோணத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

வாய்ஸ் டெஸ்ட் வேண்டாம்
அந்த வீடியோவை பார்க்கும் போது எச் ராஜாவின் உதட்டசைவும் வார்த்தைகளும் அப்படியே பொருந்தியுள்ளன. எனவே வாய்ஸ் டெஸ்டுக்கெல்லாம் அவசியமே இல்லை. லிப் மூவ்மென்ட்டும் டயலாக்கும் கச்சிதமாக பொருந்தும்படி யாராவது எடிட் செய்யமுடியுமா என்பதை எச் ராஜாதான் விளக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications