புதுவை முத்துமாரியம்மன் கோயில் உண்டியல் பணம் கொள்ளை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: முத்துமாரியம்மன் கோயிலில் கண்காணிப்பு கேமரா இல்லாததைக் கண்ட கொள்ளையர்கள், உண்டியலை உடைத்து பல ஆயிரம் ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

புதுச்சேரி நெல்லித்தோப்பில் முத்துமாரியம்மன் கோயில் ஒன்று உள்ளது. இங்கு ஆடி மாதம் என்பதாலும் வெள்ளிக்கிழமை என்பதாலும் பக்தர் கூட்டம் அதிகமாக வந்துள்ளது. இதனால் கோயில் உண்டியலில் நிறைய காணிக்கை சேர்ந்துள்ளது.

Thieves looted money by breaking the hundi in Puducherry temple

மேலும், கோயில் வளாகத்தில் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமரா பழுதாகி பல நாட்களாக வேலை செய்யவில்லை. இதையறிந்த கொள்ளையர்கள் கோயிலின் மேற்கூரையை உடைத்து, கோயிலுக்குள் வந்துள்ளனர்.

பிறகு அங்கிருந்த உண்டியலை உடைத்து பல ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதனையடுத்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுக்க, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Puducherry Nellithoppe thieves looted money by breaking the hundi and police searching the thieves
Please Wait while comments are loading...