குஷ்பு இஸ்லாத்தை பின்பற்றியதே இல்லை- வைரலாகும் திருநாவுக்கரசரின் 'பரபர' 'போன்' பேச்சு
குஷ்பு இஸ்லாத்தை பின்பற்றியதே இல்லை என திருநாவுக்கரசர் விமர்சிக்கும் போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்புவுக்கு இஸ்லாத்தை பற்றி எதுவும் தெரியாது; இஸ்லாத்தை பின்பற்றியதும் இல்லை என்று தமிழக காங். கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் விமர்சிக்கும் போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னி பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்ற குஷ்பு, பொதுசிவில் சட்டத்தை ஆதரித்து பேசினார்; இஸ்லாமியர்களின் முத்தலாக் முறைக்கு எதிரான கருத்துகளை முன்வைத்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இஸ்லாமிய தலைவர்கள் பலரும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசரிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர். திருநாவுக்கரசரும், குஷ்புவின் தனிப்பட்ட கருத்து அது என கூறியிருந்தார்.
சென்னை இமாம்
தற்போது சென்னை மக்கா பள்ளி தலைமை இமாம், திருநாவுக்கரசருடன் பேசும் தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாஜக பாணியா?
அந்த உரையாடலில், பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணியன் சுவாமி ஒரு கருத்தை தெரிவிப்பதும் அது தனிப்பட்ட கருத்து என பாஜக தலைவர்களும் சொல்லி வருகின்றனர்; அதுபோல காங்கிரஸும் செய்கிறதோ என சந்தேகம் வருகிறது என இமாம் கூறுகிறார்..

குஷ்புவுக்கு எதுவும் தெரியாது
இது அனாவசிய சந்தேகம் என்று சொல்லும் திருநாவுக்கரசர், "அவர்(குஷ்பு) இந்து மேனை மேரி பண்ணியிருக்கிறார்; அவர் இஸ்லாத்தை பின்பற்றியதும் இல்லை; அவருக்கு இஸ்லாத்தை பற்றி எதுவுமே தெரியாது" என கூறுகிறார்.

நேரில் அழைத்து கண்டிப்பு
அத்துடன் குஷ்புவை நேரில் அழைத்து தாம் கண்டித்ததாகவும், முன்னேற்றமாக பேசுவதாக நினைத்து தப்பா கருத்து சொல்லாதீங்க... இப்படி பேசிக் கொண்டிருந்தால் காங்கிரஸ் கட்சியினரே உங்களை கன்சிடர் பண்ணமாட்டாங்க என கூறிவிட்டேன் எனவும் திருநாவுக்கரசர் பதில் தருகிறார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications