ஒரே இரவில் நெல்லையை புரட்டிப் போட்ட மழை.. 4 மணி நேரம் அடித்து ஆடியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 4 மணி நேரம் தொடர்ந்து பெய்த கனமழையால் பெண்கள் நடத்தும் ஜெராக்ஸ் கடை முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 12 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. சுமார் 15 சென்டிமீட்டர் அளவிற்கு வெளுத்து வாங்கிய மழையால் நெல்லை மாவட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து கிடைத்தது.

 Thirunelveli received heavy rainfall yesterday and rain water filled in low lying area

வடகிழக்குப் பருவமழையால் நெல்லையில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் நெல்லை நகர்த் தவிர சுற்றுவட்டாரத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பேட்டை நரிக்குறவர் காலணி பகுதியில் தேங்கிய மழை நீரை எப்படி வெளியேற்றுவது என்று மாவட்ட ஆட்சியர் நந்தூரி அதிகாரிகளுடன் வந்து காலையில் பார்வையிட்டார்.

இதே போன்று பேட்டை பகுதியில் 5 பெண்கள் இணைந்து நடத்தும் ஜெராக்ஸ் கடையில் மழை நீர் புகுந்ததால் கணினி, ஜெராக்ஸ் மெஷின் உள்ளிட்டவை முற்றிலும் சேதமடைந்துள்ளன. புதிதாக வாங்கி வைக்கப்பட்ட 7 கணிணிகன், 2 ஜெராக்ஸ் மெஷின்கள் என ரூ. 7.5 லட்சம் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதால் அரசு தங்களுக்கு நிவாரணம் தந்து உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 3 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 2 பெண்கள் இணைந்து ஜெராக்ஸ் கடை மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Thirunelveli received upto 15 cm yesterday continuously 4 hours and the effects showed in low lying areas and a xErox shop which was run by woman fully devasted.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற