For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதல்வர் ஜெயலலிதாவை முட்டிய குட்டி யானை காவேரி மரணம்!

By Mathi
Google Oneindia Tamil News

elephant
முதுமலை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை முதுமலை காப்பகத்தில் முட்டித் தள்ளிய குட்டி யானை காவேரி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

உதகமண்டலத்தில் உள்ள முதுமலை வனவிலங்கு காப்பகத்தில் யானைகளை வளர்த்து, பராமரிக்கும் தெப்பக்காடு சிறப்பு முகாம் உள்ளது. இம் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த யானை குட்டிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ‘காவேரி' என்று பெயர் சூட்டியிருந்தார்.

இதுதான் கடந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அங்கு சென்ற போது வரவேற்பு அளித்தது. பின்னர் திடீரென துதிக்கையால் முதல்வர் ஜெயலலிதாவை முட்டி தள்ளிவிட்டது. இதில் முதல்வர் ஜெயலலிதா நிலைகுலைய நேரிட்டது. இந்த சம்பவம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது 3 வயதாகும் இந்த காவேரி யானைக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. வனவிலங்கு காப்பகத்தின் தலைமை டாக்டர் விஜயராகவன் தலைமையில் 4 டாக்டர்களை கொண்ட குழு சிகிச்சை அளித்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் காவேரி உயிரிழந்தது.

English summary
A three-year-old female elephant in the Theppakkadu camp coming under Mudumalai Tiger Reserce died of diarrhoea today. The elephant was christened as Kaveri by Tamil Nadu Chief Minister Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X