For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெருங்கும் ஓணம் பண்டிகை: கேரளாவிற்கு போகும் 100 டன் நெல்லை காய்கறிகள்

Google Oneindia Tamil News

நெல்லை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நெல்லை நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு 100 டன் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவில் பிரசித்தி பெற்ற பண்டிகையான ஓணம் நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கேரளாவில் இன்று முதல் 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட சந்தைகளிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள், பூக்களின் வியாபார விற்பனை சூடுபிடித்துள்ளது.

மகபாலி மன்னனை வரவேற்கும் விதமாக வாசல்களை மலர்களால் அலங்கரித்து அனைத்து வகை காய்கறிகளால் விரும்பிய உணவை சமைத்து கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவர்.

திருவோண தினத்தன்று தங்களை காண வரும் மகாபலி மன்னன் வரவேற்கும் விதமாக மலையாள மொழி பேசும் மக்கள் மகிழ்ச்சியுடன், ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை உள்ள பத்து நாட்களும் ஒணம் சதய எனப்படும் அறுசுவை உணவை மக்கள் சமைத்து உண்பர்.

ஓணம் விருந்து

ஓணம் விருந்து

கேரளாவில் பிரசித்த பெற்ற ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை தினத்தில் பலவகை காய்கறிகளினால் விருந்து சமைத்து உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிடுவது கேரள மக்களின் பாரம்பரியம். 'ஓணம் சதயா' எனப்படும் விருந்துக்காக தமிழகத்தில் இருந்து டன் கணக்கில் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர் வியாபாரிகள். கேரளாவின் 90 சதவீத காய்கறி தேவையை தமிழகமே பூர்த்தி செய்து வருகிறது.

மூட்டை மூட்டையாக காய்கறிகள்

மூட்டை மூட்டையாக காய்கறிகள்

நெல்லை, குமரி, கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து டன் கணக்கில் காய்கறிகள் கேரளாவுக்கு ஓணம் பண்டிகையின் போது அனுப்பி வைக்கப்படுகிறது. கேரளா வியாபாரிகள் ஓணம் பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்னரே முகாமிட்டு தேவையான காய்கறிகளை மொத்தமாக கொள்முதல் செய்வர். ஓணத்தை ஓட்டி அவை லாரிகளில் மூட்டை முட்டையாக அனுப்பி வைக்கப்படும்.

100 டன் காய்கறிகள்

100 டன் காய்கறிகள்

ஓணம் பண்டிகைக்காக மாலையில் நயினார்குளம் மார்க்கெட்டில் இருந்து 100 டன் காய்கறிகள் லாரிகளில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கத்தரி, கேரட், தக்காளி, வெண்டைக்காய், பூசணிக்காய், தடியங்காய் ஆகியவை வழக்கத்தை விட அதிகமாக அனுப்பி வைக்கப்பட்டது.

நயினார்குளம் மார்க்கெட்டில் தற்போது காய்கறிகள் விலை குறைவாக இருக்கும் நிலையில் சென்ற ஆண்டை விட இந்தாண்டு கேரளாவுக்கு கூடுதல் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காய்கறிகள் விலை

காய்கறிகள் விலை

நயினார்குளம் காய்கறி சந்தையில், கத்தரிக்காய் ரூ.16, கேரட் ரூ.33, பீட்ரூட் ரூ.16, முட்டைகோஸ் ரூ.12, காலிபிளவர் ரூ.45, பீர்க்கங்காய் ரூ.20, முளளங்கி ரூ.15, வெள்ளரிக்காய் ரூ.5, சீனி அவரை ரூ.8, பாகற்காய் ரூ.20, புடலைக்காய் ரூ.10, மாங்காய் ரூ.85, முருங்கைகாய் ரூ.18, வாழைக்காய் ரூ.25, மிளகாய் ரூ.10, தடியங்காய் ரூ.10, சின்ன வெங்காயம் ரூ.18, பல்லாரி ரூ.14, உருளை ரூ.25, தக்காளி ரூ.11, மல்லி ரூ.17, புதினா ரூ.15 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

English summary
The Tirunelveli Market vegetable loaded nearly 100 tonnes of vegetables to Kerala ahead of the Onam festival which have commenced in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X