ஓ.பன்னீர் செல்வம் சொல்வதெல்லாம் பொய் - ஒபிஎஸுக்கு ஈபிஎஸ் பதிலடி! : வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஓ.பன்னீர் சொல்வது பொய். எந்தக் கோப்புகளும் நிலுவையில் இல்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சியில் நடைபெற்ற பிறபடுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி இல்லத் திருமணவிழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் கூறுவது போல எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை. அனைத்துக் கோப்புகளும் கையெழுத்துப் பெற்று பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சில அரசாணையாகவும் வெளியாகியுள்ளது.

 TN Chief minister Edappadi told Whatever OPS told is wrong and no files with us

ஜெயலலிதா ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் அனைத்துத் திட்டங்களும் நல்லமுறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த அரசு விவசாயிகளின் நலன் நாடும் அரசாக உள்ளது.

இந்த ஆட்சியில் குடிமராமத்து வேலைகள் மிக சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துச் செல்கின்றனர். 1519 எரிகள் தூர்வாரப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மேலும் 265 ஏரிகளில் தூர்வாரும் பணிக்காக 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Whatever OPS told is wrong and no files with us. Allfiles changed into G.O and works are in Progress told TN CM Edappadi Palanisamy.
Please Wait while comments are loading...