ஹிமாச்சல பிரதேச புதிய முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹிமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்ற ஜெய்ராம் தாகூருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்ட மன்ற தேர்தலில் பாஜக கட்சி அபாரமாக வெற்றி பெற்றது. காங்கிரஸ் இதனால் மோசமாக ஆட்சியை இழந்துள்ளது. இந்த நிலையில் பாஜக கட்சியை சேர்ந்த ஜெய்ராம் தாக்குர் இமாச்சல பிரதேச முதல்வராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

TN CM Edappadi Palanisamy wishes Himachal Pradesh CM

இன்று இமாச்சல பிரதேஷ் முதல்வராக ஜெயராம் தாக்கூருக்கு ஆளுநர் ஆச்சாரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

அவர் தனது வாழ்த்தில் ''ஹிமாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்று இருக்கும் ஜெய்ராம் தாகூருக்கு வாழ்த்துக்கள். உங்களின் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் பாஜக 38 இடங்களில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP selected Jairam Thakur as the new CM for Himachal Pradesh. Tamilnadu CM Edappadi Palanisamy wishes Jairam Thakur.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X