For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவின் குற்றச்சாட்டை விடுங்க.. தமிழக அரசின் தயாள மனசைப் பாருங்க.. 1 லட்சம் லிட்டர் குடிநீர்!

கேரளாவுக்கு தமிழக அரசு 1 லட்சம் குடிநீர் அனுப்பி வைத்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: என்னதான் தமிழக அரசு மீது கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை வாரி வீசினாலும், நம் தரப்பில் அவர்களுக்கு அளித்து வரும் ஆதரவும், உதவிகளும் குறையாமல்தான் நீண்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு சார்பில் 1 லட்சம் லிட்டர் குடிநீர் பாட்டில்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும் காரணம்

தமிழக அரசும் காரணம்

இடுக்கி அணையை கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிடாமல், இப்படி ஒரேடியாக மொத்தமாக திறந்துவிட்டதும் எங்கள் வெள்ள பாதிப்புக்கு ஒரு காரணம் என்று நீதிமன்றத்தில் தமிழக அரசு மீது கேரளா ஒரே போடாக போட்டது.

சுருக்கென்ற வார்த்தை

சுருக்கென்ற வார்த்தை

பெருமளவு உதவிகள் தமிழகத்திலிருந்து கேரளத்தில் நடந்து கொண்டிருக்கும் வேளையில்தான் இந்த பழி மற்றும் அவச்சொல் வந்து விழுந்தது. ஆனாலும் கேரளாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி உரிய விளக்கம் அளித்து அதற்கு பதில் அளித்திருந்தார். என்ன விளக்கம் அளித்தாலும், வெள்ளத்துக்கு தமிழகமும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு, இன்னமும் சுருக்கென்றேதான் உள்ளது.

மீண்டு வரும் கேரளம்

மீண்டு வரும் கேரளம்

அம்மாநிலத்தில் வெள்ளம் என்று அறிந்தவுடன் தமிழக அரசு சார்பில், ரூ. 10 கோடி வழங்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். இந்த நிதி உதவி தவிர பிற உதவிகள் அதாவது, அரிசி, தானியங்கள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் என 42 விதமான நிவாரண பொருட்கள் ரூ.4 கோடி மதிப்பில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது வெள்ள மீட்பு பணிகள் கேரளாவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. கேரளாவை சீரமைத்தே தீருவது என பலரும் அதிதீவிரத்தில் இறங்கியுள்ளனர்.

1 லட்சம் லிட்டர் குடிநீர்

1 லட்சம் லிட்டர் குடிநீர்

இந்நிலையில் கேரள மக்களுக்கு தேவையான 1 லட்சம் அம்மா குடிநீர் கேரளாவுக்கு நேற்றுஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 11 லாரிகளில் இந்த தண்ணீர் ஏற்றப்பட்டு அதனை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடியசைத்து அனுப்பி வைத்தார். "யார் பாதிக்கப்பட்டாலும் முதலில் சென்று தமிழக மக்கள் உதவி செய்து வருகிறார்கள், அதற்கு தமிழக அரசும் துணையாக இருக்கிறது" என்று செய்தியாளர்களிடம் அப்போது வேலுமணி தெரிவித்தார். அமைச்சர் கூறிய இந்த வார்த்தைகளில் உள்ள உண்மை பொருளை கேரளம் விரைவில் புரிந்து கொள்ள முன்வரவேண்டும்!

English summary
Tn Govt., sends 1 lakh litres of water to flood hit Kerala
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X