ஓடவும் முடியலை.. ஒதுங்கவும் முடியலை.. பறக்கும் ரயில் திட்டத்தால் பாழாய் போன பக்கிங்காம் கால்வாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பக்கிங்காம் நிரம்பியது | தமிழகத்தில் 5 பேரை காவு வாங்கிய மழை- வீடியோ

சென்னை: தென்சென்னையில் பறக்கும் ரயில் திட்டம் அமைக்கப்பட்டதால் என்னதான் பொதுமக்களுக்கு நன்மைதான் என்றாலும் நூற்றாண்டுகாலமாக சாக்கடையையாவது சுமந்து ஓடிக் கொண்டிருந்த பக்கிங்காம் கால்வாய்தான் பாழாய் போய்விட்டது.

எண்ணூர் முதல் முட்டுக்காடு வரை விரிந்து கிடக்கிறது பக்கிங்காம் கால்ய்வாய். ஆங்கிலேயர் காலத்தில் பக்கிங்காம் கால்வாயில் சரக்கு போக்குவரத்து நடைபெற்றது.

பக்கிங்காம் “ஓடை”

பக்கிங்காம் “ஓடை”

நாடு விடுதலை அடைந்த பின்னர் சென்னை பெருநகரமாக விரிவடைந்த நிலையில் பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கியது; சென்னை மாநகரின் அத்தனை கழிவுநீரையும் சுமந்து செல்லும் ஓடையாகிப் போய்விட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்

ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்

இருப்பினும் மழைகாலங்களில் வெள்ளநீர் வடிந்து ஓடும் வடிகாலாகவும் பயன்படுத்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை- கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் பாதை திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

பாய்ந்தோடிய மழைநீர்

பாய்ந்தோடிய மழைநீர்

அப்போது ஈவிரக்கமே இல்லாமல் பக்கிங்காம் கால்வாயின் கொஞ்ச நஞ்ச இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு தெரு சாக்கடை செல்லும் கழிவோடையைப் போல குறுக்கப்பட்டுவிட்டது. இதன்விளைவுதான் 2015-ல் வெள்ளம் சென்னை பெருநகரை சூழ்ந்த போது பக்கிங்காம் கால்வாயில் ஓட வேண்டிய நீரெல்லாம் சாலைகளில் பல அடி உயரத்து பாய்ந்தோடின.

தொடரும் அவலம்

தொடரும் அவலம்

இப்போதும் அதே நிலைமைதான் நீடிக்கிறது. வடசென்னையில் பக்கிங்காம் கால்வாய் நீர் ஓடுவதற்கு போதுமான இடம் இல்லாமல் நகருக்குள் பாய்ந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் கனமழை பெய்து செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறக்கப்பட்டதால் தென்சென்னையும் வெள்ளத்தால் மீண்டும் மோசமாக பாதிக்கும் அபாயம் இருக்கிறது. ஆகையால் இருக்கிற பக்கிங்காம் கால்வாயை சரியாக தூர்வாரி; ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும் என்பது அரசின் முன் உள்ள போர்க்கால நடவடிக்கைகளில் ஒன்று.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Southern Chennai resident urged that the TamilNadu govt should take action against the encroachments on buckingham canal.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற