For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பற்றாக்குறை பருவமழை.. ஏரிகளில் நீர்மட்டம் சரிவு.. கடும் குடிநீர் பஞ்ச அபாயத்தில் தமிழகம்

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் மரணம் ஒருபக்கம் தொடர குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 3 மாத காலங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும் காலமாகும். தமிழக நீர் ஆதாரத்தின் முக்கியமான அம்சம் வடகிழக்கு பருவமழையாகும்.

கடந்த 2015ஆண்டு வடகிழக்குக் பருவமழை காலத்தில் கடும் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த அளவில் மழை பெய்யவில்லை. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் வற்றிப் போயுள்ளன.

பயிர்கள் கருகிவிட்டன. விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். கடன் பட்டு சாகுபடி செய்த பயிர்கள் கருகியதால் பலர் தற்கொலை செய்து கொண்டும் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்து வருகின்றனர்.

குறைந்து போன பருவமழை

குறைந்து போன பருவமழை

வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 62% குறைவாக பெய்துள்ளது. கடந்த 142 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால், 1876ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 63% குறைவாக மழை பெய்ததே, அதிகபட்ச மழை குறைவாக உள்ளது.

இயல்பை விட குறைவு

இயல்பை விட குறைவு

கடந்த அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை இயல்பை விட 64% குறைவாகவும், நவம்பர் மாதம் 80% குறைவாகவும், டிசம்பர் மாதம் 24% குறைவாகவும் மழை பெய்துள்ளது. கடந்த ஓராண்டில் பெய்த மழை அளவை பொறுத்தவரை, இயல்பை விட 41% குறைவாக மழை பெய்துள்ளது.

வறண்ட நீர் நிலைகள்

வறண்ட நீர் நிலைகள்

2016ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை, தமிழகத்தில் 26 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கு மேல், இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. அதிகபட்சமாக கடலூர், புதுச்சேரி, நாமக்கல் மாவட்டங்களில் 81 சதவீதம் இயல்பை விட மழை குறைவாக பெய்துள்ளது. கடந்த ஆண்டு வெள்ளத்தில் தத்தளித்த மாவட்டங்கள் கூட இப்போது வறண்டு போய் காணப்படுகின்றன.

தாண்டவமாடும் வறட்சி

தாண்டவமாடும் வறட்சி

வடகிழக்கு பருவமழை பொய்த்ததால் தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பல மாவட்டங்களில் நெல், கரும்பு, மக்காச்சோளம் என பல்வேறு பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான விவசாயிகள் கடன் வாங்கி பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கண் முன்னே கருகி போவதை கண்டு செய்வதறியாது தவிக்கின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடு

வறட்சியால் விவசாய பாதிப்பு ஒருபுறம் இருக்க மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் நாள் கணக்கில் தாமதமாகிறது. இதனால் காலி குடங்களுடன் மக்கள் போராட தயாராகி வருகின்றனர். பல இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

சரியும் நீர்மட்டம்

சரியும் நீர்மட்டம்

மேட்டூர் பவானி சாகர், அமராவதி, பெரியாறு, வைகை, நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளிலும், சென்னை குடிநீர் ஆதரமாக விளங்கும் ஏரிகளிலும் நீர்மட்டம் சரிந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளதால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

குளம் குட்டைகள் வறண்டு போனதால் நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து வருகிறது. மாநிலம் முழுவதும் குடிநீர் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும் முன் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

English summary
As the rains failed in Tamil Nadu, the state is marching towards an acute water shortage in the year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X