காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்... ஒரே குரலில் தமிழக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தில் இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்... ஒரே குரலில் அமைச்சர்கள்!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று தமிழக முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதததால் தமிழக மக்கள் மிகுந்த கொந்தளிப்பில் உள்ளனர். இந்த விஷயத்தில் பொறுத்திருப்போம் என்று சொன்ன தமிழக அரசும் தங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக என்ன நிலைப்பாடு எடுக்கப்போகிறது என்று தமிழகமே எதிர்பார்த்துக் கிடக்கிறது.

ஆனால் காலக்கெடு முடிந்த போதும், தமிழக அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. நாளை அதிகாரப்பூர்வ நடவடிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக எந்த முடிவாக இருந்தாலும் முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என்று தெரிவித்துவிட்டார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், காவிரி பிரச்னையில் மத்திய அரசு முடிவை தெரிவித்த பின் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார். மேலாண்மை வாரியம் அமைய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறியவர் காலக்கெடு முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications