அன்று அனிதா... இன்று கிருஷ்ணசாமி... இன்னும் எத்தனை பலி வேண்டுமாம் நீட் கொடுங்கோலனுக்கு?
நீட் காவு கொள்ளும் மரணங்கள் தொடருகின்றன. அன்று அனிதா, இன்று கிருஷ்ணசாமி என தொடருகின்றன மரணங்கள்.
Recommended Video

சென்னை: நீட் எனும் நாசகார தேர்வு காவு கொள்ளும் உயிர்பலிகள் தொடருகிறது. அன்று நீட்டை கண்டித்து அனிதா தூக்கிட்டு மாண்டார். இன்று மகனை கேரளாவுக்கு தேர்வு எழுத அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணித்துப் போயுள்ளார்.
அனைத்து மாநில மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கை. இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் அனிதா தூக்கிட்டு மாண்டு போனார்.
தமிழரின் கல்வி உரிமையை பறிப்பதைக் கண்டித்து அனிதா தற்கொலை செய்தது தமிழகத்தை பெரும் கொந்தளிக்க வைத்தது. ஆனாலும் மத்திய அரசு இதைப்பற்றி ஒருதுளியும் கவலைப்படாமல் இந்த ஆண்டும் நீட்டை திணித்தது.
இம்முறை தமிழக மாணவர்களை அகதிகளைப் போல இந்தியாவின் எல்லை மாநிலங்களுக்கு விரட்டியடித்திருக்கிறது. அதுவும் பல நூறு பேரை பலி கொண்ட புழுதிப் புயல் வீசும் ராஜஸ்தானுக்கும் யுத்த பதற்றம் நீடிக்கும் சீனா எல்லையான சிக்கிமுக்கும் கூட தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத கட்டாயப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.
அத்துடன் 5,000க்கும் அதிகமான தமிழக மாணவர்களை கேரளாவில் பல தேர்வு மையங்களில் எழுத வைத்திருக்கிறார்கள். இப்படி கேரளாவுக்கு தேர்வு எழுத சென்ற இடத்தில்தான் கஸ்தூரி மகாலிங்கம் என்ற திருத்துறைபூண்டி மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணித்துள்ளார்.
அன்று அனிதா.. இன்று கிருஷ்ணசாமி... இப்படி இன்னும் எத்தனை எத்தனை உயிர்களைத்தான் காவு வாங்கப் போகிறதோ இந்த நீட் எனும் கொடுங்கோலன்!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications