மாநில உரிமைகளை மிதிப்பதா? வரம்பு மீறி செயல்படுவதா? ஆளுநருக்கு திமுக, இடதுசாரிகள் கடும் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாநில உரிமைகளை மிதிப்பதா? வரம்பு மீறி செயல்படுவதா?- வீடியோ

  சென்னை: கோவை மாவட்ட நிர்வாகத்துடன் ஆளுநர் பன்வாரிலால் திடீரென ஆலோசனை நடத்தியதற்கு திமுக, காங், இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

  பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக் கொண்டு மாநில அரசுக்கு குடைச்சல் கொடுப்பது வழக்கமான ஒன்று. தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான ஆட்சி நடைபெற்று வருகிறது.

  அதனால்தான் என்னவோ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரடியாக நிர்வாகத்தை கையிலெடுத்திருக்கிறார் போல. இன்று கோவையில் மாவட்ட நிர்வாகத்துடன் பன்வாரிலால் ஆலோசனை நடத்தினார்.

  அரசு கூட்டியிருக்க வேண்டும்

  அரசு கூட்டியிருக்க வேண்டும்

  இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளன. திமுக முதன்மை செயலர் துரைமுருகன் கூறுகையில், தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு செயல்படவில்லை. அதனால்தான் ஆளுநர் பன்வாரிலால் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் என்றார்.

  எடப்பாடி ராஜினாமா தேவை

  எடப்பாடி ராஜினாமா தேவை

  தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இளங்கோவன்: தமிழகத்தின் உண்மையான முதல்வராக ஆளுநர் பன்வாரிலால் செயல்படுகிறார்; தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும்.

  எதுவும் இல்லாத எடப்பாடி அரசு

  எதுவும் இல்லாத எடப்பாடி அரசு

  இந்திய கம்யூனிஸ் கட்சி மாநில செயலர் முத்தரசன்: தமிழகத்தை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என நினைக்கிறாரா முதல்வர் எடப்பாடி? தன்மானமோ சுயகவுரவமோ எடப்பாடி அரசுக்கு இல்லை.

  வரம்பு மீறுவதா?

  வரம்பு மீறுவதா?

  மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன்: மாவட்ட அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது மாநில உரிமைகளுக்கு எதிரானது. இதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. அதிகார வரம்பை மீறி ஆளுநர் செயல்படுகிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TamilNadu Political Parties leaders had strongly condemnt the Governor Banwarilal's review meeting with the Dist. officials in Coimbatore.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற