For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ஜினியரிங் கலந்தாய்வு எப்போது?...அறிவிப்பு வெளியாகாததால் மாணவர்கள் தவிப்பு!

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு எப்போது அறிவிக்கப்படும் என்ற மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3வது வாரத்தில் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக மாணவர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு மாணவர்கள் கலந்தாய்வு முறையில் சேர்க்கப்படுகின்றனர். மொத்தமுள்ள 584 பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக 1 லட்சத்து 42 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த விண்ணப்பங்களுக்கான ரேண்டம் எண்ணும், ரேங்க் பட்டியலும் கடந்த 22ம் தேதி வெளியிடப்பட்டன. இதனைத் தொடர்ந்து கலந்தாய்வு ஜூன் 27ஆம் தேதியே தொடங்கலாம் என்று கூறப்பட்டது.

ஜூலை 17ல் மருத்துவ கலந்தாய்வு

ஜூலை 17ல் மருத்துவ கலந்தாய்வு

ஆனால் மருத்துவ கலந்தாய்விற்கான தேதி நீட் தேர்வு முடிவுகள் தாமதமானதால் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 17ம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

குளறுபடிகளை தவிர்க்க

குளறுபடிகளை தவிர்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்பில் தாங்கள் விரும்பிய இடம் கிடைக்காமல் போகும் பட்சத்தில் சில மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கான வாய்ப்பு உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு எப்போது?

பொறியியல் கலந்தாய்வு எப்போது?

அப்போது தரவரிசையில் குளறுபடிகள் ஏற்பட்டு மாணவர்களுக்கான வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாது என்று மருத்துவக் கலந்தாய்விற்குப் பிறகே பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படும். கடந்த வருடம் மருத்துவ கலந்தாய்வுக்கும், என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கும் இடையே ஒரு வாரம் இடைவெளி இருந்தது. எனவே இந்த ஆண்டு என்ஜினீயரிங் கலந்தாய்வு, ஜூலை மாதம் 3வது வாரம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளார். பொறியியல் கலந்தாய்வு ஏறத்தாழ ஒரு மாத காலம் நடைபெறும் என்பதால் வகுப்புகள் தாமதமாக தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடியூவிடம் அனுமதி பெற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

English summary
TNEA counselling may kick starts from third week of July sources from Anna unicersity confirms this
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X