இன்றைய எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம்.. டிவிட்டரில் விளாசிய எச் ராஜா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து டிவிட்டரில் எச் ராஜா விளாசியுள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதா மரணத்துக்கு நீதிக்கோரியும் தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன.

Today protest is proxies of private medical colleges: H Raja

அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, இன்றைய எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் தனியார் உறைவிட பள்ளிகள், கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் பினாமிகளின் போராட்டம் என எச் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
H Raja tweets that the today protest is for the private boarding schools, and proxies of private medical colleges.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற