கோவையில் மத்திய அச்சகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு.. வணிகர்கள் கடையடைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: மத்திய அச்சகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் அச்சம் கொண்டு வரப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Traders of Periyanayakkan palayam protesting by closing shops against to central press transfer

இந்நிலையில் நாட்டிலுள்ள 17 அச்சகங்களை 5 ஆகக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, கோவை, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் இயங்கிவரும் அச்சகங்கள் மூடப்பட்டு, அவற்றின் பணிகள் நாசிக்கில் உள்ள அச்சகத்தோடு இணைக்க மத்திய அமைச்சரவை முடிவுசெய்தது.

இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டாங்களும் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து கோவை அச்சகத்தை மூடக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் வருகின்ற 15-ம் தேதியுடன், கோவை அச்சகம் மூடப்படும் என்று மத்திய அரசு அதிகாரபூர்வமான அறிவித்துள்ளது.

இந்நிலையில் கோவையில் செயல்படும் மத்திய அச்சகத்தை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வணிகர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள பெரியநாயக்கன்பாளையம், பிரஸ்காலனி உள்ளிட்ட இடங்களில் கடைகள் மூடப்பட்டுள்ளது.

கடைகள் மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. வணிகர்களின் கடையடைப்பு போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் அவதியடைந்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central government has annouced that Kovai Periyanayakkan Palayam press will be closed on 15th january. Traders of Periyanayakkan palayam protesting by closing shops against to central press tranfer.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X