தென்மேற்கு பருவக் காற்று தேனி பக்கம்..இனி செம்ம ஜாலி- இன்று முதல் சென்னை, மதுரை-போடி ரயில் இயக்கம்!
தேனி: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகலப்பாதைப் பணிகள் முடிவடைந்த போடிநாயக்கனூர் வரை சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் ரயில் சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று இரவு 8.00 மணிக்கு போடிநாயக்கனூரிலிருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
ரயில் எண்.20602, மதுரை - டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ரயில் எண்.06702 தேனி - மதுரை தினசரி முன்பதிவு அல்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் போடிநாயக்கனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூர் - சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு 3 நாள்கள்) 16-ந் தேதி சென்னை சென்ட்ரலிலிருந்தும். 18-ந் தேதி போடிநாயக்கனூரிலிருந்தும் சேவையை தொடங்குகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக அடுத்த நாள் காலை 9.35 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும். சென்னையிலிருந்து இந்த ரயில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும்.
முன்பதிவு அல்லாத மதுரை - போடிநாயக்கனூர் தினசரி ரயில் சேவை 16-ந் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 8.20-க்கு புறப்பட்டு வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி வழியாக காலை 10.30 மணிக்கு போடிநாயக்கனூர் சென்றடையும்.
சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கச்சேகுடா - மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை கொடைக்கானல் சாலை (கொடைரோடு) ரயில் நிலையத்தில் 15-ந் தேதி முதல் நின்று செல்கிறது. கொடைக்கானல் சாலை (கொடைரோடு) ரயில் நிலையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், நண்பகல் 12.15 மணிக்கு இந்த ரயில்கள் நின்று செல்லும் சேவையைத் தொடங்கி வைக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications