தூத்துக்குடியிலிருந்து புறப்படும் சில ரயில்கள் ரத்து.. மைசூர் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து தூத்துக்குடி நகரமே போர்க்களமாக மாறியது. திருச்செந்தூர், நெல்லை, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும், பை-பாஸ் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
தூத்துக்குடி நகருக்குள் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றபோதிலும் கூட, தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில்கள் தாமதமாகின.
தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு, 6 மணியளவில்தான் தூத்துக்குடியில் இருந்து கிளம்பியது. மேலும் சில ரயில்கள் வரத்து மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் தாமதமாக கிளம்பின.
ரயில் தண்டவாளத்தில் யாரேனும் நாச வேலைகளில் ஈடுபட்டிருக்கலாமோ என்ற சந்தேகத்தால், போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டதால் ரயில்கள் தாமதமாக புறப்பட்டுள்ளன.
வேகம் குறைந்து இயக்கப்பட்ட ரயில்கள் தூத்துக்குடியிலிருந்து சற்று தொலைவுக்கு பிறகே வேகமாக இயக்கப்பட ஆரம்பித்துள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications