மறைந்த நடராஜனின் உடலுக்கு டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன் ஆகியோர் நேரில் அஞ்சலி
மறைந்த நடராஜனின் உடலுக்கு டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
Recommended Video

சென்னை: மறைந்த ம.நடராஜனின் உடலுக்கு, ஆர்.கே.நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன், விவேக் ஜெயராமன், ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதனையடுத்து உடல்நலம் பெற்ற அவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

இதனையடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான முறையில் இருந்த அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.
அஞ்சலிக்காக சென்னை பெசண்ட் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வைகோ, பழ.நெடுமாறன், வைரமுத்து, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், நடராஜனின் உடலுக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரலேகா நேரில் அஞ்சலி செலுத்தினார். பி.ஆர்.ஓ.,வாக தென் ஆற்காடு மாவட்டத்தில் நடராஜன் பணியாற்றியபோது, அங்கு ஆட்சியராகப் பணியாற்றியவர் சந்திரலேகா.
இதனையடுத்து ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினரும் சசிகலாவின் உறவினருமான டி.டி.வி தினகரன் தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். ஜெயா டிவி தலைமை நிர்வாக அதிகாரி விவேக் ஜெயராமனும் நடராஜனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications