டிடிவி தினகரன் எம்எல்ஏக்கள் தலைகாவிரியில் புனித நீராடல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடகு: குடகில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தலைக் காவிரியில் புனித நீராடினர்.

முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்தவுடன் புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கிய தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஜாலியாக தங்கள் பொழுதை ஊஞ்சல் விளையாடியும், சீசா விளையாடியும் கழித்தனர்.

TTV Dinakaran's MLA take holy bath in origin of Cauvery

இந்நிலையில் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களிலிருந்து ஜக்கையன், எடப்பாடி அணிக்கு தாவினார். இதைத் தொடர்ந்து 18 எம்எல்ஏக்கள் கர்நாடக மாநிலம் கூர்க்கில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 நாள்களாக எம்எல்ஏக்கள் வெளியே வராமல் இருந்தனர். தற்போது காவிரியில் புஷ்கரம் நடந்து வருவதால் இதன் விஷேசம் அறிந்த எம்எல்ஏக்கள் குடகில் உள்ள தலை காவிரிக்கு டூர் சென்றது. அங்கு அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TTV Dinakaran faction MLAs who stay in Kudagu, today took holy bath in oridin of Cauvery on the account of Cauvery Pushkara function.
Please Wait while comments are loading...