For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரனின் பக்கா பிளான்... ஆட்சியை ஆட்டம் காண வைக்கப்போகும் ஸ்லீப்பர் செல்கள்!

முதல்வர் பழனிசாமி ஆட்சியை கலைக்க தினகரன் போட்ட பக்கா பிளான் ஒர்க் அவட் ஆகத் தொடங்கியுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரன் முன்னிலை... கலக்கத்தில் அணி தாவிய எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்- வீடியோ

    சென்னை : டிடிவி. தினகரன் அடிக்கடி சொல்லும் ஸ்லீப்பர் செல்கனை இறக்க வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது. சுயேச்சை வேட்பாளராக சட்டசபைக்கு செல்லும் தினகரன் இனி தான் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கப் போகிறார் என்றும், ஆட்சியை ஆட்டம் காண வைக்க தினகரனுக்கு நல்ல சான்ஸ் கிடைத்து விட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    டிடிவி. தினகரன் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதில் இருந்து சொல்லி வரும் ஒரே வாசகம் முதல்வர் பழனிசாமி அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்பது தான். தனது ஆதரவு எம்எல்ஏக்களை வைத்து முதல்வர் பழனிசாமிககு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற முயற்சி செய்தார்.

    ஆனால் ஆளுநர் இவர்களின் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனையடுத்து சட்டத்தின் உதவியை நாடினார்கள். நீதிமன்றத்திலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே 18 எம்எல்ஏக்கள் கட்சியை மீறி செயல்பட்டதாக கொறடா அளித்த புகாரின் பேரில் அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

    சபாநாயகர் நடவடிக்கை

    சபாநாயகர் நடவடிக்கை

    இதனால் 18 எம்எல்ஏக்கள் தங்கள் அலுவலகத்தை காலி செய்து விட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். இதனால் இந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த தொகுதிகள் காலியானவை என்று சபாநாயகர் அறிவித்தாலும், தேர்தல் ஆணையம் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சவாலாக இருக்கும் தினகரன்

    சவாலாக இருக்கும் தினகரன்

    இந்நிலையில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தினகரன், ஆட்சிக்கு கடும் சவாலாக இருப்பார் என்றே தெரிகிறது. ஏற்கனவே என்னுடைய ஸ்லீப்பர் செல்கள் எதிர் அணியில் இருக்கின்றனர் என்று கூறி வருகிறார் தினகரன், ஒரு வேளை அவர்கள் இப்போது வெளிவந்தால் தினகரனின் பக்கம் பலமானதாகி விடும்.

    பெரும்பான்மை இல்லை

    பெரும்பான்மை இல்லை

    இதே போன்று 18 எம்எல்ஏக்கள் விவகாரத்திலும் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் பட்சத்தில் 18 எம்எல்ஏக்கள் + தினகரன் மட்டுமே இணைந்து முதல்வர் பழனிசாமி ஆட்சிக்கு பங்கம் ஏற்படுத்த முடியும். முதல்வர் பழனிசாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டுள்ளது.

    தினகரன் உறுதி

    தினகரன் உறுதி

    இந்நிலையில் 19 + ஸ்லீப்பர் செல்களும் வெளிவந்தால் முதல்வர் பழனிசாமி அரசுக்கு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் முன்னணி நிலவரத்தை பார்த்தே காலையில் மதுரையில் வெற்றி உற்சாக பேட்டியளித்த தினகரன் முதல்வர் பழனிசாமியின் ஆட்சி 3 மாதத்தில் களையும் என்று நாளும் குறித்துள்ளார். ஆக இந்த ஆண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டும் அதிமுக அரசியல் அனல் பறக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

    English summary
    TTV. Dinakaran's plan to fall down CM Palanisamy government is in a right way, will his sleeper cell emerge out from Palanisamy faction now?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X