For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வசமாக சிக்கிய தினகரன் கும்பல்.. ஓட்டுக்கு ரூ4,000 கொடுத்த வீடியோ சிக்கியது!

ஆர்கே நகர் தொகுதியில் வாக்காளர்களை தினகரன் கோஷ்டி பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் வீடியோ

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஆர்.கே.நகரில் கொத்து கொத்தாக தினகரன் கோஷ்டி பணப்பட்டுவாடா புகாரில் சிக்கினாலும் அசருவதாக இல்லை... ஒரு ஓட்டுக்கு ரூ4,000 கொடுத்து தினகரனின் தொப்பி சின்னத்துக்கு வாக்களிக்க சொல்லும் புதிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.கே.நகரில் பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு நாளும் புது புது யுக்திகளை கடைபிடிக்கிறது ஃபெரா தினகரன் கோஷ்டி. ஆன்லைன் ஷாப்பிங், மளிகை பில் கட்டுவது, ஓடும் பஸ்ஸில் பட்டுவாடா என புது புது ரகங்களை இறக்கிக் கொண்டிருக்கிறது தினகரன் கோஷ்டி.

உத்தமராசா வேசம்

உத்தமராசா வேசம்

அதேநேரத்தில் அய்யயோ...நாங்க பணம் கொடுக்கலை.. தொப்பி வேசம் போட்டு யாரோ பணம் கொடுக்கிறாங்க என பச்சை பொய்யை அவிழ்த்து உத்தமராசாவாக வேசம்போடுகிறார் தினகரன். நாள்தோறும் தினகரன் கோஷ்டியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் பணப்பட்டுவாடா புகாரில் கைதாகிக் கொண்டே இருக்கின்றனர்.

புதிய வீடியோ

புதிய வீடியோ

தற்போது ஆர்.கே.நகரில் தொப்பி சின்னத்துக்கு ஓட்டு போட சொல்லி பணம் கொடுக்கும் புதிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. அதில் கையில் ரூ2,000 கட்டுகளை ஒரு நபர் வைத்திருக்கிறார்.

ஓட்டுக்கு ரூ 4,000

ஓட்டுக்கு ரூ 4,000

வாக்காளர் பட்டியலை வைத்து பெயரை வாசித்தபடியே ஒரு நபருக்கு ரூ2,000 நோட்டுகள் இரண்டை திணித்து தொப்பிக்கு ஓட்டு போட சொல்கிறார். அதுவும் குடியிருப்பின் கேட்டை மூடச் சொல்லிவிட்டுதான் இந்த பர்சேஸிங் நடைபெறுகிறது.

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் எதிர்க்கட்சிகள் புகார் கொடுத்துள்ளன.

English summary
Team Sasikala faction of ADMK were caught on camera distributing money to voters of RK Nagar constituency. A video shows supporters of TTV Dinakaran handing out Rs 4,000 to each voter inside a house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X