அதிகாரத்தில் இருந்தால் தான் பயப்படுவீர்களா.. ஏன் இப்படிப் பேசுகிறார் தினகரன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி-வீடியோ

  சென்னை: அதிகாரத்தில் இருந்தால்தான் பயப்படுவீர்களா என டிடிவி தினகரன் மிரட்டும் தொணியில் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தினகரன் பேச்சு முற்றிலும் மாறியுள்ளது. பட்டபரிவர்த்தனமாக எல்லோரையும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்.

  டிடிவி தினகரனின் பேச்சில் சற்று தெனாவெட்டு தூக்கலாக வெளிப்படுவது அவரது பேட்டிகளை ஆரம்பம் முதல் பார்த்து வருபவர்களுக்கு நன்றாக புரியும்.

  டோக்கன் கொடுக்கவில்லை

  டோக்கன் கொடுக்கவில்லை

  இந்நிலையில் சென்னை பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆர்கே நகர் மக்களுக்கு வாக்குக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

  நக்கலாக பதிலளிக்கும் தினகரன்

  நக்கலாக பதிலளிக்கும் தினகரன்

  அதற்கு நக்கலாக பதில் சொன்னார் டிடிவி தினகரன். கடன் சொல்லி எப்படி வாக்கு பெற முடியும் என்ற அவர், உங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ரீவைன்ட் செய்து பாருங்கள் என்றார்.

  அங்க கேட்கவேண்டியதுதானே

  அங்க கேட்கவேண்டியதுதானே

  வாக்குக்கு பணம் கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமி அணிதான் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தன்னிடம் கேள்விக்கும் நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வத்திடம் போய் கேட்க வேண்டியதுதானே என எகிறினார்.

  மிரட்டிய தினகரன்

  மிரட்டிய தினகரன்

  மேலும் அதிகாரத்தில் இருந்தால்தான் பயப்படுவீர்களா என்றும் செய்தியாளர்களை பார்த்து கேட்டார் தினகரன். தினகரனின் இந்த மிரட்டல் பேச்சு செய்தியாளர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran threatens reporters for asking questions. He asked that reporters to be afraid if he was in power.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற