"பணம் தந்தால் மட்டுமே பதவி.." மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி பரந்தாமன் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வார்டு செயலாளர் பதவியில் தொடர பணம் கேட்டதாகவும், பணம் கொடுக்காததால் பதவி பறிக்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மனைவி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பரந்தாமன். முன்னாள் ராணுவ வீரரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். மேலும், அதன் பிறகு தவெகவில் இணைந்த அவர், கட்சிக்காக வேலை செய்து வந்துள்ளார். தேர்தல் சமயத்தில் தவெகவில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

TVK Vijay

தேர்தல் பணிகளில் ஈடுபட்டதை தொடர்ந்து, ராமேஸ்வரம் 10வது வார்டு செயலாளர் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதனால் பரந்தமான் மகிழ்ச்சியில் இருந்தார். இருப்பினும், அந்த மகிழ்ச்சி சற்று நேரம் மட்டுமே நீடித்துள்ளது. ஏனென்றால் திடீரென பரந்தாமானை அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, வேறு ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

பதவியில் தொடர பணம் கேட்டதாகவும், அதை வழங்காததால் பதவி பறிக்கப்பட்டதாகவும் பரந்தாமன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு பல லட்சம் செலவழித்து வேலை செய்திருந்த நிலையில், திடீரென பதவி பறிக்கப்பட்டதால் பரந்தாமன் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலாவிடம் பரந்தாமன் கேள்வி எழுப்பியபோது, கட்சியினர் முன்னிலையிலேயே ஒருமையில் பேசி அவமானப்படுத்தியதாகவும் பரந்தாமான் மனைவி தேவகி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் பரந்தாமன் மன உளைச்சலில் இருந்ததாகவும், தொடர்ந்து கட்சியில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த பரந்தமான் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது கணவரின் தற்கொலைக்கு மாவட்ட செயலாளரே காரணம் என தேவகி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே பரந்தாமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவரது மனைவி, உறவினர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டம் தொடர்ந்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பரந்தாமனின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான புகார்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+