அதிமுக இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடும் தீபா... பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இரட்டை இலை எனக்கே சொந்தம் என கூறி ஆணையத்துக்கு தீபா கடிதம் தந்திருப்பதுடன் 50000 பேர் கையெழுத்துடன் அபிடவிட் தாக்கல் செய்ததன் பின்னணியில் ஆடிட்டர் குருமூர்த்தி இருக்கிறாராம்.

இரட்டை இலை யாருக்கு சொந்தம் என தொடரப்பட்ட புகாரில் முடிவெடுக்க, புகாரை ஜூன் 16 வரை தள்ளி வைத்தது தலைமை தேர்தல் ஆணையம். நேற்றுடன் அதற்கான காலக்கெடு முடிந்து விட்டது.

அதிமுக அம்மா, அதிமுக புரட்சித்தலைவி அணிகள் லட்சக்கணக்கில் லாரி லாரியாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

திடீர் தீபா

திடீர் தீபா

திடீரென தீபாவும் தனது பங்குக்கு 50000 பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளார். தேர்தல் ஆணையம் காலக்கெடுவை ஒரு மாதம் தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எனக்கே எனக்கு

எனக்கே எனக்கு

அதற்காகத்தான் இரட்டை இலை எனக்கே சொந்தம் என கூறி ஆணையத்துக்கு தீபா கடிதம் தந்திருப்பதுடன், 50 ஆயிரம் அஃபிடவிட்டுகளையும் சமர்பித்திருக்கிறார்.

பேக்கிரவுண்டில் ஆடிட்டர்

பேக்கிரவுண்டில் ஆடிட்டர்

தீபாவின் பின்னணியில் இருந்து ஆலோசனையும் அறிக்கையும் தந்து வருபவர் ஆடிட்டர் குருமூர்த்தி. அவரது யோசனையின்படிதான் இரட்டை இலைக்கு தீபா சொந்தம் கொண்டாடுகிறார் என்கிறார்கள் அதிமுக சீனியர்கள்.

சூட்டோடு சூடாக பெயரும் மாற்றம்

சூட்டோடு சூடாக பெயரும் மாற்றம்

அதேபோல தனது அமைப்பின் பெயரையும் கூட காரணத்தோடுதான் மாற்றியுள்ளார் தீபா. அதாவது அதிமுகவில் தானும் ஒரு பிரிவு என்பதைக் காட்டிக் கொள்வதற்காக இந்த செட்டப் பெயர் மாற்றமாம்.

நடத்துங்க, நடத்துங்க.. நல்லா நடத்துங்க!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Sources said, Auditor and journalist S Gurumurthy support to Deepa.Deepa had requested the Election Commission of India (ECI) to grant more time to file the affidavit to claim the party's 'two-leaves' symbol.
Please Wait while comments are loading...