For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணல் கடத்திய லாரிகளை மடக்கிய வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் மீது தாக்குதல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சோதனை சாவடியில், வாகன தணிக்கையில் ஈடுபட்ட வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்களை தாக்கிய கும்பல், கடத்தல் மணல் லாரியை, பெங்களூருக்குள் தப்பிச் செல்ல வைத்துள்ளது.

அந்திவாடி சோதனைச் சாவடியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்களான ராஜாராம் மற்றும், நாகராஜ்.

Two regional transport inspectors attacked near Hosur

அவ்வழியே வந்த 3 மணல் லாரிகளை மடக்கி பிடித்து விசாரித்து கொண்டிருந்தனர். அப்போது கார் மற்றும் பைக்குகளில் பாய்ந்து வந்த 25 பேர் கொண்ட கும்பல், ஆய்வாளர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தியு உள்ளனர். இதன்பிறகு லாரிகள் அங்கிருந்து தப்பியோடச் செய்யப்பட்டன.

இத்தாக்குதல் நடத்திய 25 பேர் மீதும் மத்தியகிரி போலீசாரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மொத்தம், 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே தப்பியோடிய லாரி பெங்களூருக்கு மணல் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

English summary
Two regional transport inspectors were attacked by 25 members mob near Hosur and manage to release sand loaded lorries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X