செம்ம கலாய்... பாஜகவின் உதவியை நாடும் உதயநிதி ஸ்டாலின்.. எதற்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மெர்சல் படத்துக்கு பாஜக முழு ப்ரமோஷன் செய்தது போல் தான் நடித்த இப்படை வெல்லும் படத்துக்கும் ப்ரமோஷன் செய்ய வேண்டும் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் பேசியிருந்தார். இந்த வசனங்களுக்கு தமிழக பாஜக தலைவர்களான தமிழிசையும், எச்.ராஜாவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 Udhayanidhi Stalin wants BJP to promote his movie

மேலும் இந்த வசனங்களுக்காக எச்.ராஜா நடிகர் விஜய்யின் வாக்காளர் அட்டை வரை தோண்டி எடுத்தார். இந்த காட்சிகளையும் நீக்க வலியுறுத்தினர். எனினும் தயாரிப்பு நிறுவனம் அதற்கு மறுத்துவிட்டது.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் இப்படை வெல்லும். இந்தப் படம் இந்த மாதம் 9-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்த படம் ஒரு ஆக்ஷன் படமாகும். இதன் டிரெய்லர் காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டன.

இதுகுறித்து உதயநிதி கூறுகையில் மெர்சல் படத்துக்கு முழு ப்ரமோஷன் செய்தது பாஜகதான். அதுபோல் என்னுடைய இப்படை வெல்லும் படத்துக்கும் எச்.ராஜாவையும், தமிழிசையையும் பேச வைக்கலாம்னு நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Udhayanidhi Stalin wants BJP to promote his movie Ippadai Vellum like Mersal film.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற