தென்காசியில் பார்வதி வீட்டில் நல்ல பாம்பு.. "நான் வரேன், நீ போப்பா"னு சொன்னதுமே பாம்பு போயிடுச்சு
தென்காசி: தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.. கனமழை அதிகமாகிவிட்டாலே பாம்புகள் வருகை பெருகிவிடும்.. அந்தவகையில் இப்போது தென்காசி உட்பட தமிழகம் முழுவதும் பாம்புகள் நடமாட்டம் பெருகி வருகிறது. அந்த வகையில்
கனமழை பெய்தாலே பாம்புகள் நடமாட்டம் குறித்த பீதிகளும் சேர்ந்தே வந்துவிடுகின்றன.. இதுபோன்று மழை பெய்யும்போது பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதற்கு முக்கியக் காரணம் அவற்றின் வாழிடம் வெள்ளத்தில் மூழ்கிவிடுவதுதான்.

சென்னை மழை
பாம்புகள் பொதுவாக தரையில் உள்ள பொந்துகள், வளைகள் மற்றும் புதர்களுக்கு அடியில்தான் வாழும்.,.. ஆனால், கனமழை காரணமாக, இந்த பொந்துகளில் தண்ணீர் நிரம்பிவிடும். இதனால் பாம்புகளால் பொந்துக்குள் இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டு விடுகிறது. அதனால்தான், நீரில் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவும், உயிர் பிழைப்பதற்காக உயரமான, உலர்ந்த இடங்களை தேடி வெளியேறுகின்றன...
அதேபோல பாம்புகளுக்கு, குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான மழைக்கால சூழலில் அவற்றால் தங்கள் உடலை கதகதப்பாகவும் வைத்திருக்க முடியாது.. அதனால் வெளிப்பகுதியைவிட ஓரளவு வெப்பமாகவும், உலர்வாகவும் வீடுகளின் உட்புறம் உள்ளன.. எனவே தங்களுக்கு தேவையான வெப்பத்தை பெறவும், தஞ்சம் அடைவதற்காகவும் வீடுகளுக்குள் பாம்புகள் நுழைந்து விடுகின்றன.
மழைக்காலத்தில் வீடுகளுக்குள் பாம்புகள்
அதுமட்டுமல்ல, இதுபோன்ற மழைக்காலத்தில் தவளைகள், தேரைகளின் நடமாட்டம் ஜாஸ்தியாகவே இருக்கும்.. இந்த உயிரினங்கள்தான் பாம்புகளுக்கு சூப்பர் உணவாகும்.. எனவே இதுபோன்ற உணவுகளை தேடி செல்லும்போது, தவறுதலாகவும் வீடுகளுக்குள் நுழைந்துவிட வாய்ப்புள்ளது... வீடுகளுக்குள் பாம்பு புகுவதற்கு இப்படி பல காரணங்கள்..
இதோ இப்போது மழைக்காலம், குளிர்காலம் மாறி மாறி வீசி, புயலும் அடித்து வருகிறது.. இந்த கனத்த மழையால் பாம்புகள் அவதிக்குள்ளாகி உள்ளன.. கடந்த சில நாட்களாகவே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது... அதிலும், தற்போது டிட்வா புயல் பீதியை தந்து விட்டது..
சென்னைக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறிவிட்டது.. இதனால் 'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் பாம்பு
இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.. பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இதனால் பல்வேறு குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.. இதன்காரணமாக, பாம்புகள் தங்களது உயிரை கையில் பிடித்து கொண்டு, வீடுகளுக்குள் படையெடுக்க துவங்கி விட்டன..
ஏற்கனவே மழை நீர் புகுந்து, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வரும்நிலையில், பாம்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது.. பாம்புகள் வீட்டிற்குள் வந்துவிடுவதால் குழந்தைகள், வயதானவர்களை வைத்து கொண்டு, பீதியில் உறைந்து விடுகிறார்கள்.. இப்போது சென்னையில் பல வீடுகளில் பாம்புகள் புகுந்துவிட்டதாம்.
இதனால், அவசர போலீஸ் எண் 100 மற்றும் 101 தொடர்பு கொண்டு, , சென்னை எழும்பூரில் உள்ள, மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து வருகிறார்கள். பொதுமக்களின் விவரங்கள், உடனடியாக தீயணைப்பு துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தீயணைப்பு துறையினரும் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று பாம்புகளை பத்திரமாக பிடித்து செல்கிறார்கள்.
1127 பாம்புகள் பிடிபட்டன
அப்படித்தான் கடந்த மாதம் 29ம் தேதியில் இருந்து, நேற்றைய தினம் வரை, தமிழகம் முழுதும் வீடுகளில் புகுந்த, 1,127 பாம்புகள் பிடிக்கப்பட்டு, அவற்றை பத்திரமாக வனப்பகுதியில் தீயணைப்புத்துறையினர் விட்டனர். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மட்டும் 125 பாம்புகள் பிடிபட்டுள்ளன.
மேலும், ஆபத்தான இடங்களில் வெள்ளத்தில் சிக்கி இருந்த, 18 பேரையும், 8 கால்நடைகளையும் மீட்டுள்ளனர். சாலை உள்ளிட்ட இடங்களில், சாய்ந்து கிடந்த, 88 மரங்களை அப்புறப்படுத்தி உள்ளனர்.
அதுமட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட கனமழை பெய்து வரும் அனைத்து மாவட்டங்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த மழைநீரை வெளியேற்றி உள்ளார்களாம்.. இந்த தகவலை தீயணைப்பு துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
தென்காசி பாட்டி
இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள ஆழ்வார்குறிச்சி குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு வீட்டிற்குள் நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டதாம். உடனே அந்த வீட்டிலிருந்த மூதாட்டி அந்த பாம்பிடம் பேசி உள்ளார்.. அது வீடியோவாகவும் வெளிவந்துள்ளது..
அந்த வீடியோவில் "நாகராஜா போப்பா... நான் உன் கோவிலுக்கு வரேன்... இப்போ நீ போயிடுப்பா " என சொல்கிறார்.. அந்த பாம்பும் வந்த திசையிலேயே திரும்பி செல்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இத்தனைக்கும் நல்ல பாம்பு விஷத்தன்மை கொண்டது.. நல்ல பாம்பு கடித்தால் மூளை நரம்பு மண்டலத்தையே பாதித்துவிடும்.. அப்படியிருந்தும் பாட்டி, இந்த பாம்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது வியப்பை தந்து வருகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications